பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

குமரியின் மூக்குத்தி

 'ஒன்றும் இல்லை அம்மா! சின்னச் சமாசாரம். இந்த நாய் எனக்குத் திருட்டுப் பட்டம் கட்டுகிறது” என்று ஆத்திரத்துடன் பேசினாள் பாக்கியம்.

'நீங்களே பாருங்கள் அம்மா, இந்த அம்மாள் பேசுகிறதை. நாய் என்று சொல்லுகிறாள். திருட்டைக் கண்டு பிடித்துவிட்டேன் என்ற ஆத்திரம்'

தங்கவேலன் அந்தப் பங்களாவுக்கு வந்து இரண்டு மாதங்களே ஆகியிருந்தன, பங்களாத் தோட்டத்தைப் பராமரிக்கவும் மற்ற ஏவல்களைச் செய்யவும் அவனை நியமித்திருந்தார்கள். இருபத்திரண்டே வயசான அவன் வாட்டசாட்டமாக வளர்ந்திருந்தான். எந்த வேலைக்கும் அஞ்சாதவன். நாலு கோணல் எழுத்துத் தெரிந்திருந்தால் அவன் இருக்கவேண்டிய இடமே வேறாக இருந்திருக்கும். சுறுசுறுப்பு, நேர்மை, கண்டிப்பு உடையவன் தங்க வேலன். இந்த இரண்டு மாதத்தில் அவன் ஐயாவினுடைய அபிமானத்தைப் பெற்றான். எசமானியம்மாளும் எடுத்ததற்கெல்லாம் அவனைத்தான் கூப்பிடுவாள். அந்த வீட்டிலேயே சாப்பிட்டுக்கொண்டு அங்கேயே தங்கினான். அவனுக்குத் தாய் தகப்பன் யாரும் இல்லையாம்.

பாக்கியம் ஒரு வருஷமாக அந்த வீட்டில் வேலை செய்கிறாள். நல்லவள்தான். ஏதோ இன்று போதாத காலம். அவள் மனசுக்குள் சனிபகவான் புகுந்தான். அவள் கையை நீளச் செய்தான்.

நவராத்திரி முடிந்துவிட்டது. அந்தப் பங்களாவில் கொலு வைத்திருந்தார்கள். இன்றைக்கு அதைக் கலைத்து எல்லாவற்றையும் பெட்டியில் எடுத்து வைத்தார்கள்.

அப்படி எடுத்து வைத்தபோது ஒருவரும் இல்லாத சமயம் பார்த்துப் பாக்கியம் ஒரு பொம்மையை எடுத்துத் தான் கொண்டு வந்திருந்த பழம் பையில் போட்டு ஒரு மூலையில் பத்திரப்படுத்தினாள். இதை எப்படியோ தங்கவேலன் தெரிந்துகொண்டுவிட்டான். அவளைத் தனியே