பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருட்டுக் கை

125,



அழைத்துக் கேட்டான். அவள் பணிந்து போகவில்லை. திருடினவள் விருப்புடன் பேசுவதைக் கண்டு அவனுக்குக் கோபம் கோபமாக வந்தது. -

கடைசியில் எசமானியம்மாளுக்கே விஷயம் தெரிந்து விட்டது. ‘ஏண்டி பாக்கியம், அவன் சொல்கிறமாதிரி உனக்கு வயசாகியும் புத்தி இல்லையா? திருடுகிறதையும் திருடிவிட்டு இத்தனை பேசுகிறாயே” என்று அவள் கேட்டாள்,

இந்த ஆங்காரப் பேச்சின் பலனாகப் பாக்கியத்தை வேலையை விட்டுத் தள்ளிவிட்டார்கன். 'கையும் வாயும் படைத்த உனக்கும் நமக்கும் இனிச் சரிப்படாது " என்று எசமானியம்மாள் கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள்.

பாக்கியம் அந்த வீட்டை விட்டுப் புறப்பட்டபோது, "இரு, இரு; உன்னை விட்டேனா பார்!’ என்று தங்கவேலனைக் கறுவிக்கொண்டே போனாள்.


***


ரு மாசத்துக்கு முன்னால் நிகழ்ந்த இந்த நிகழ்ச்சி இப்போது நினைவுக்கு வந்தது தங்கவேலனுக்கு "அவளுக்கு இவ்வளவு அழகான மகளா' என்று எண்ணினான். "ஏன் இருக்கக்கூடாது? ஏன் அவளைக் கோபித்துக்கொன்டோம்? என்ற இரக்கமும் கூடவே தோன்றிற்று. அவள் வேலையை விட்டுப் போகாமல் இருந்தால் இந்தப் பெண்ணை அவன் அடிக்கடி பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கும்.

"ஏன் துரை, இன்னும் உள்ளே போகவில்லையா?” என்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தான் தங்கவேலன். அவளேதான். பள்ளிக்கூடத்துக்குள் தான் அழைத்துவந்த குழந்தையை விட்டுவிட்டு அவள் வந்துவிட்டாள். தங்க வேலன் இன்னும் படிக்கட்டுக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தான். அவனுக்கே வெட்கமாகப் போய்விட்டது. அந்தப் பெண்ணை ஒரு முறை பார்த்துவிட்டு உள்ளே விடு விடு வென்று நுழைந்தான்.