பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

குமரியின் மூக்குத்தி



அவன் முன்னே நின்றவள் பொன்னம்மாள்! பாக்கியத்தின் பெண்ணாகிய பொன்னம்மாள்! அவனைக் கொஞ்ச நேரம் பள்ளிக்கூட வாசலிலே நிற்க வைத்தாளே அந்தப் பொன்னம்மாள் தான். ஆனால் வேலையை இழந்தாளே அவளுடைய மகளாகிய பொன்னம்மாள்; திருட்டுக் கையால் வளர்க்கப்பெற்ற பொன்னம்மாள். இவளா இவன் மகள்!

'நீங்கள்...' மேலே பேச முடியாமல் அசடு வழிய விழித்தான் தங்கவேலன்.

'நீ நினைக்கிறது தெரியும், தம்பி. பாக்கியத்தோடு சண்டை போட்டதும் எசமானியம்மாள் அவளை வேலையை விட்டுத் தள்ளினதும் நன்றாகத் தெரியும், தம்பி; அதைப் பற்றித்தானே நீ யோசிக்கிறாய்?"

'இல்லை...' மறுபடியும் அவன் என்னவோ மாதிரி ளுெஞ்ஞெ முஞ்ஞெ என்றான்.

"அதையெல்லாம் மறந்துவிடு தம்பி. அவள் பண்ணின தப்புத் தப்புதான். அதற்கு இது பிராயச்சித்தம் என்று வைத்துக்கொள்ளேன்” என்று சிரித்தான் முனிசாமி.

***

ல்யாணம் நடந்துவிட்டது. 'அவர் முகத்தில் நான் எப்படி விழிக்கிறது? நான் எப்படிப் பேசுகிறது?’ என்று கேட்ட பாக்கியத்திற்கு, "நீ அவன் முன்னாலே நின்று பேச வேண்டாமே. மாமியார்க்காரி பேசாமல் மரியாதையோடு இருக்கிறதுதானே நியாயம்?' என்று சொன்னான் முனிசாமி.

பங்களாவிலே ஒரு மூலையில் குடிசை போட்டுக் கொண்டு இல்வாழ்வைத் தொடங்கினான் தங்கவேலன். முனிசாமி எப்படி விரோதத்தை மறந்து தனக்குப் பெண் கொடுக்க முன் வந்தான் என்ற புதிரை அவனால் விடுவிக்கவே முடியவில்லை. அவனேயே கேட்டுவிடலாம் என்று கூடச் சில சமயம் தோன்றியது. ஆனால் அவன் கேட்க