உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருட்டுக் கை

129



வில்லை. பொன்னம்மாதான் இருக்கிறாளே, அவளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று பொறுத்திருந்தான்.

குடியும் குடித்தனமுமாக மனைவியோடு வாழத் தொடங்கிய அன்றே அவன் அவளைக் கேட்டு ரகசியத்தைத் தெரிந்து கொண்டான். .

"அது ஒரு பெரிய கதை' என்று பீடிகை போட்டுக் கொண்டு அவள் ஆரம்பித்தாள். நடந்தது இதுதான்.

வேலையை விட்டு விட்டு ஆத்திரத்தோடு விட்டுக்குப் போனாள் பாக்கியம். அன்று மாலை முனிசாமி விட்டுக்கு வந்தான். வந்தவுடன், 'அந்தப் பயலுக்குச் சரியானபடி புத்தி புகட்டவேண்டும்" என்று அவனிடம் சொன்னாள். அவன் நடந்ததைக் கேட்டான். ஆனால் கோபம் அடைய வில்லை. உனக்கு வேலை போய்விட்டதே என்று கோபம் வருகிறதா? நீ பண்ணினது தப்புத்தான் என்று எனக்குத் தோன்றுகிறது. தப்புச் செய்தது நீயாக இருக்க, அவனைக் கோபிக்கிறதில் பிரயோசனம் என்ன?" என்று கேட்டான்.

நீங்களும் அந்தப் பயலோடு சேர்ந்து கொண்டீர்களா?" என்று ஆத்திரம் பொங்கக் கேட்டாள் பாக்கியம்.

இந்தா, வீண் ஆத்திரம் வேண்டாம். உன் சமாசாரம் இருக்கட்டும். நான் சொல்கிற சந்தோஷ சமாசாரத்தைக் கேள்.”

"என்ன புதையல் கிடைத்திருக்கிறது?" என்று கோபத்தோடு பேசினாள் அவள்.

'நிதானமாகக் கேட்டால் சொல்கிறேன். எனக்கு ஐந்து ரூபாய் சம்பளம் உயர்த்தி இருக்கிறார்கள்."

ஹும்

"எங்கள் ஆபீஸில் ஒரு பைண்டர் இருக்கிறான். அவன் புத்தகத்தைத் திருடிக் கொண்டே வந்தான். அதை நான் கண்டுபிடித்து எசமானிடம் சொன்னேன். அவனை வேலை

குமரி-9