பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/137

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருட்டுக் கை

131

 இந்தக் கதையைக் கேட்டான் தங்கவேலன். 'உன்னுடைய அம்மா மனசு மாறினதைத்தானே சொன்னாய்? உன் அப்பா என்மேல் வலை வீசினது ஏன்?" என்று கேட்டான்.

'அதுவா? என் அப்பாவே சொன்னார். அதையும் சொல கிறேன்” என்று அந்த வரலாற்றையும் சொன்னாள் பொன்னம்மா.

***

திருட்டைத் தான் கண்டு பிடித்தமையால் தனக்குச் சம்பள உயர்வு கிடைத்த நினைவோடு, தங்கவேலன் செய்கையையும் நினைத்தபோது முனிசாமிக்கு அந்த இளைஞனிடம் மதிப்பு உண்டாயிற்று. ஒரு நாள் அவன் அந்தப் பங் களாவின் வாசலில் நின்று, தங்கவேலனைப் பார்த்தான். அப்போது தங்கவேலன் தோட்டத்தில் ஒரு பாத்தியை வெட்டிக்கொண்டிருந்தான். உடம்பில் வேர்வை வழிய அவன் உழைப்பில் ஈடுபட்டிருந்தபோது முனிசாமி கவனித்தான். அந்தக் கோலத்தில் அவனுடைய சுறுசுறுப்பும் உடல்வன்மையும் உழைப்பும் முனிசாமிக்குப் புலப்பட்டன. அவனிடம் பின்னும் மதிப்பு உண்டாயிற்று. அதற்குப் பிறகுதான் மெல்ல மெல்ல அவனைச் சிநேகிதம் செய்துகொண்டான். அவன் மனைவியிடமும் தங்கவேலனைப் பற்றி உயர்வாகப் பேசித் தன் எண்ணத்திற்குச் சம்மதிக்கச் செய்தான்.

"அதெல்லாம் சரி: அன்றைக்குப் பள்ளிக்கூடத்து வாசலில், அது ஏனோ என்று சொல்லிவிட்டு ஒடினாயே! அப்போது என்னனைப் பார்த்தாயோ?" என்று பழங்கதையைச் சொன்ன பொன்னம்மாவைக் கேட்டான் தங்க வேலன்.

"நீங்கள்தாம் வெட்கம் கெட்டுப்போய் என்னை விழித்து விழித்துப் பார்த்தீர்களே! வயசுப் பெண்ணை