பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/138

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

குமரியின் மூக்குத்தி

 - அப்படிப் பார்க்கலாமா? அதற்குப் பயந்து கொண்டுதான் நான் ஒடினேன்.”

'என்மேல் உனக்கு அப்போது கோபம் இல்லையா?”

"நான் எப்போதும் அப்பாவினுடைய கட்சி' என்று தன் விழியைச் சுருட்டினாள் அந்த மடமங்கை.

எசமானி அம்மாள் அவனைத் தனியாகச் சந்தித்த போது வேடிக்கையாகக் கேட்டாள். 'ஏண்டா, தங்கவேல், திருட்டுக்கை என்று சொல்லி வேலையை விட்டுத் தள்ளினவள் மகளைக் கட்டிக் கொண்டாயே! உனக்கு வெட்கமாக இல்லை? திருடி மகள் திருடியாக இருக்கமாட்டாளா? எசமானியம்மாளுக்குப் பிரியமான வேலைக்காரன் அவன். அக்த அபிமானத்தினாலேதான் அவள் அப்படி வேடிக்கையாகக் கேட்டாள்.

அதற்குத் தங்கவேலன். "ஆமாம் அம்மா, இவளும் பெரிய திருடிதான் !" என்றான்.

"என்ன! எதைத் திருடினாள்?"

"என் மனசை!” என்று சொல்லித் தங்கவேலன் சிரித்தான்.