பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/142

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

குமரியின் மூக்குத்தி


நின்று கிதானித்து, மேலும் சில கேள்விகளைக் கேட்டு விடை தெரிந்துகொண்ட பிறகுதான் காடு என்பது சுடுகாடு அல்ல என்று தெளிந்தார்!

"வருவதற்கு நேரமாகுமா?" என்று கேட்டார்.

நீச்சத் தண்ணியைக் குடிச்சுட்டுப் போச்சு. உருமத்துக்கு முந்தி வந்துவிடும்.”

அவருக்குப் பேச்சுப் புரியவில்லை. தமிழ் மொழிக்குள்ளே எத்தனே வேறுபாடு ஊருக்கு ஊர் வித்தியாசம். மாரப்பக் கவுண்டன் காலையில் காட்டுக்குப் போவதைப் பற்றிச் சொல்லும்போது இந்தப் பேச்சு விசித்திரம் ஞாபகத்துக்கு வந்தது. அது கிடக்கட்டும்.

மாரப்பனுடைய மனைவியான பழனியாயி அவனுக்கு ஏற்றவள். அவள் வெகுளி. கண்டதை அப்படியே நம்பி விடும் வெள்ளை உள்ளம் படைத்தவள். கல்யாணம் ஆகி ஆறு வருஷமாகியும் இன்னும் குழந்தை இல்லை, "உனக்குக் குமரீசுவரரிடம் பக்தி இல்லை. இருந்தால் உன்னைக் கண் திறந்து பார்ப்பார். உன் வயிறு திறக்கும்’ என்று அவன் சொல்வான்.

'நான், என்ன செய்யட்டும்?' என்று அவள் கேட்பாள். -

'நான் மோகனூர் போகும்போது எல்லாம் நீயும் வா. காவிரியில் முழுகினால் கர்மம் தொலையும்’ என்பான். வீட்டிலே வேலையை வைத்துக்கொண்டு திடீரெனப் பெண் பிள்ளே ஊர்ப் பிரயாணம் புறப்படமுடியுமா? காட்டில் இருந்து வேலை பார்ப்பாள். சாளயிலே சமையல் பண்ணிச் சாப்பிடுவதும் உண்டு. -

2

ஒரு சமயம் மாரப்பன் குமரீசுவரரைத் தரிசனம்செய்ய வந்திருந்தான், அப்போது நவராத்திரி காலம். கோயிலில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருடைய மண்டகப்படி