பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/149

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதிய வீடு

143

 .

கள் மாரப்பக் கவுண்டன் அவளைத் தன் மாமியார் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு நல்லிபாளையம் போனான். மனைவி வந்த பிறகு குமரிபாளையம் போகலாமென்று தன் பழைய வீட்டிலேயே தங்கியிருந்தான்.

பழனியாயிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குமரிபாளையத்தில் இப்போது வர வர வீடுகள் அதிகமாகிக் கொண்டுவருவதாகக் கவுண்டன் சொன்னான். வேறு ஊர்க் கவுண்டர்கள் சிலரும் அந்த இடத்தில் வீடு கட்டிக் கொண்டார்கள். குழக்தைக்கு ஆறு மாதம் ஆகும் வரையில் கவுண்டன் மாமனார் வீட்டுக்கும் நல்லிபாளையத்துக்குமாகப் போய் வந்துகொண்டிருந்தான். குமரீசுவரரைத் தரிசித்து விட்டு நல்லிபாளையம் போவான். குமரிபாளையத்தில் உள்ள வீட்டில் யாரோ வேலைக்காரனை வைத்திருந்தான்.

குழந்தையும் கையுமாகப் பழனியாயி வந்தாள். முதலில் குமரீசுவரரைத் தரிசித்துக் கொண்டு குமரிபாளையம் அழைத்துப் போனான் மாரப்பன். அவள் போன அன்று அங்கே கொட்டுமேளம் பிரமாதமாக இருந்தது. யாரோ புதிதாக விடு கட்டிக்கொண்டு குடி வந்தார்களாம். . .

'யார் அது? எந்த ஊர்க்காரர்?" என்று கேட்டான் மாரப்பக் கவுண்டன். - -

'மோகனூர்த் தாசி பூங்காவனமாம். இந்த ஊருக்குக் குடி வந்து விட்டாளாம்” என்றான் வேலைக்காரன். -

மாரப்பன் அப்படியே பிரமித்து நின்றுவிட்டான்!