பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



குமரியின் மூக்குத்தி

- 11.

போருக்கு வேண்டிய ஆயத்தங்கள் நடைபெற்றன. தன்னை அவமதித்த அனந்தபதுமனேத் தன் கையாலே தண்டிக்க வேண்டுமென்ற ஆசை கருணாகரனுக்கு. அதனால் அவனே படைகளுக்கெல்லாம் தலைமை பூண்டு கலிங்கம் சென்று போரை நிகழ்த்தினன்; வெற்றி பெற்றான், போர் நிகழும் போதே அந்தபுரத்தில் தக்க காவலைப் போட்டான். அவனுக்குக் கலிங்கத்து அரசியின் மூக்குத்தியிலே கண் அல்லவா!

கலிங்கப் போரில் கருணாகரன் வெற்றி பெற்றான்;போரை எழுப்புவதற்குக் காரணமான மூக்குத்தியைக் கொணர்ந்து சக்கரவர்த்தி குலோத்துங்கன் திருவடியில் வைத்தான். " நீ கலிங்கத்தை வென்றது பெரிதன்று. இதைக் கொண்டுவந்தது தான் மிகப்பெரிது” என்று சோழமன்னன் அவனைப் பாராட்டினன்.

3

"கேட்டாயா, பாண்டிய மகாராஜனே! கலிங்கப் போருக்கு மூல காரணம் ஒரு மூக்குத்தி என்பதைத் தெரிந்துகொண்டாயா? அது பின்னும் என்ன என்ன குழப்பங்களை உண்டாக்கியதுஎன்பதைஇன்னும்சொல்கிறேன், கேள்” என்று விளக்குப் பதுமை மறுபடியும் சொல்லத் தொடங்கியது.

பட்டத்துத் தேவியின் மூக்கில் ஏறிக்கொண்ட மூக்குத்தி மற்ற ராணிகளின் மனத்தில் ஆசையையும் பொறாமையையும் எழுப்பியது. குலோத்துங்கன் மனைவி மாரில் அவனுக்கு மிகவும் பிரியமுள்ளவள் ஒருத்தி அது தனக்கு வேண்டுமென்று கேட்டாள்.தன் அரண்மனைக்கு வந்த பிறகும் அந்த வைர மூக்குத்தி மன்னனுக்குக் கவலை கொடுத்து வந்தது. அந்தப்புரத்தில் புயல் குமுறியது; பூசல் எழுந்தது. வீரனாகிய குலோத்துங்கன் எல்லா மனைவிமாரையும் ஒருநாள் அழைத்துக் கூட்டி வைத்துக்