பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குமரியின் மூக்குத்தி

13


மானத்துக்கு அரசனுடைய உடன்பாட்டைப் பெற்று விட்டாள்.

அதன்படி இந்த மூக்குத்தி அடுத்த தலைமுறையில் சோழன் மகளும் பாண்டிய அரசன் தேவியுமாகிய ஒருத்தியிடம் சென்றது. பெரும்பாலும் சோழ பாண்டிய குலத்தில் பெண் கொடுப்பதும் வாங்குவதும் தொடர்ச்சியாக வருவது உனக்குத் தெரிந்ததுதானே? அந்த வழக்கப் படியே இந்த மூக்குத்தி,சோழன் அரண்மனையிலும் பாண்டியன் அரண்மனையிலும் மாறி மாறித் தன் ஒளியை வீசத் தொடங்கியது.

"கேளாய், சந்திரவம்சத்தில் தோன்றிய சக்கரவர்த்தியே!இனிமேல்தான்முக்கியமான கதையைச் சொல்லப் போகிறேன், கவனமாய்க் கேள்" என்று கூறிப் பதுமை தன் கதையைத் தொடர்ந்து சொல்லலாயிற்று.

4

ஒரு சமயம் பராந்தக பாண்டியன் என்னும் அரசன் பாண்டிய நாட்டை ஆண்டுவந்தான். அவனுடைய பட்டத்துத் தேவியாகிய உலக முழுதுடையாள் மூக்கில் அந்த மூக்குத்தி ஒளிவிட்டது. அவள் மதுரை மாநகரில் எழுந்தருளியிருக்கும் மீனாட்சியம்மையை நாள்தோறும் தரிசிக்காமல் இருப்பதில்லை. மாதம் ஒரு முறை வெள்ளிக் கிழமையன்று இங்கே வந்து கன்னியாகுமரியம்பிகையைத் தரிசித்துச் செல்வாள். அதுவரையில் இந்த மூக்குத்தி தாயிடமிருந்து பெண்ணுக்குத் தடையின்றி வந்து கொண்டே இருந்தது. இப்போது உலக முழுதுடையாளுக்கு மைந்தன் பிறந்தான். மறுபடி இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். அதற்குப் பின் குழந்தை ஒன்றும் பிறக்கவில்லை. அவளுக்குப் பெண்ணே பிறக்காமல் இருக்கவே அந்த மூக்குத்தி பல பேருடைய ஆசையைத் தூண்டியது. அவளுடைய மூத்த மகனாகிய அரிமர்த்தனனுடைய மனைவி அது தனக்குத்தான் கிடைக்கப் போகிறதென்று எண்ணி