பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குமரியின் மூக்குத்தி

17

அம்பிகையின் திருநாசியில் நட்சத்திரத்தைப் போல் ஒளி விடத் தொடங்கியது.

பாண்டியன்இந்தமுடிவைஏற்றுக்கொண்டான். உலகமே ஏற்றுக்கொண்டது. அத்தகைய மூக்குத்தியை நீ உன் கண்ணாலும் கருத்தாலும் அழுக்கு ஆக்கலாமா? சொல். அது பாவம் அல்லவா?

5

பராக்கிரம பாண்டியன் கண்ணைத் திறந்து பார்த்தான்.பதுமை விளக்கு ஒளிர்ந்து கொண்டே யிருந்தது.லலிதாஸஹஸ்ரநாமம் முடியும் தறுவாயில் இருந்தது. 993-ஆம் நாமமாகிய “ஓம் அஞ்ஞான த்வாந்த தீபிகாயை நம:"(அஞ்ஞானமாகியஇருட்டைப் போக்கும் தீபம் போல் உள்ளவள்) என்பதைச் சொல்லிக் குங்குமத்தை அம்மையின் திருவடியில் இட்டார் அர்ச்சகர்.

பாண்டியன் கண்ணில் நீர் அரும்பியது. "ஆம், தாயே! நீ என் அஞ்ஞானத்தை இப்போது போக்கிவிட்டாய். இந்த விளக்குப் போக்கியதா? நீ தான் போக்கினாயா ? அல் லது உன் திருநாசியிலுள்ள அணி மாயையை உண்டாக்கிப் பின்பு துடைத்து விட்டதா?-எனக்கு ஒன்றும்விளங்கவில்லை. நான் மனசால் பாவியாகி விட்டேன். இதற்குப் பிராயச்சித்தம் செய்யத்தான் வேண்டும்” என்று சொல்லிக் கன்னத்தில் அறைந்துகொண்டான்.

"ஓம் லலிதாம்பிகாயை நம:" என்று அர்ச்சகர். அர்ச்சனையை நிறைவேற்றினர்.

பிறகு பாண்டியன் தான் செய்த அபசாரத்துக்குப் பிராயச்சித்தம் செய்தான். பல அரிய வைரங்களைத் தொகுத்து ஆபரணங்கள் செய்து அம்பிகைக்குப் பூட்டி னான். அவன் தான் நினைத்த பிழைக்கு இரங்கித் தன் கண்ணிலிருந்து முத்தை உதிர்த்து ஆரமாக்கின. அப்பொழுதே அவனைஅம்பிகைதான்மன்னித்துவிட்டாளே!

குமரீ-2