பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

குமரியின் மூக்குத்தி

பாய்வது; உங்கள் வீட்டுச் சுவரைத் துளைத்துவிடும்”என்றார் ஒருவர்.

"வாழை மரம் உங்களுக்கு அவசியம். உங்கள் வீட்டுக்கு அடிக்கடி விருந்தாளிகள் வருவார்கள். இலை வாங்கிக் கட்டாது. காய்க்கென்று போடாவிட்டாலும், இலைக் கென்று நாலுமரம் வையுங்கள்” என்பது ஒருவர் யோசனை.

அதைக் கேட்டுக்கொண்டிருந்த வேறொரு நண்பர் அவர் போனவுடன் விசாகனை நெருங்கி வந்தார்."ஸார், நான் சொல்கிற தற்காகக் கோபம் கொள்ள வேண்டாம். கண்ட பேர் பேச்சைக் கேட்காதீர்கள். வாழை போட்டால் அது பேய் மாதிரி இலைகளைப் விரித்துப் படரும். அப்புறம் கீழே ஒரு செடி வளரமுடியாது.” என்று இரகசியமாகச் சொன்னார்.

"முருங்கை மரம் வீட்டிலே வைக்கக் கூடாது என்று எங்கள் பாட்டி சொல்லுவாள்" என்று ஒருவர் அவன் காதில் போட்டு வைத்தார்.

இவ்வளவு பேர்களுடைய அற்புதமான அறிவுரை களுக்கிடையே விசாகனுடைய அநுபவ அறிவு வேலை செய்தது. அவனுக்குத் தெரிந்தது ஒன்றுதான்; அன்றும் சரி, இன்றும் சரி, இனியும் சரி அந்த ஒன்றைப்பற்றி அவனுக்குச் சந்தேகமே இல்லை. அதுதான் கீரைப்பாத்தி.

மற்ற முயற்சிகளையெல்லாம் ஒத்தி வைத்து விட்டு அவன் கீரைப் பாத்தி போட்டான். அவனுக்குத் தெரிந்த முறையிலே போட்டான். அதற்கு எங்காவது போய்ப் படிக்க வேண்டுமா என்ன?

பாத்தி பச்சைப் பசேலென்றிருந்தது. செடி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்தது. ஒரு சாண் உயரம் முளைக் கீரை வளர்ந்தது. ஆறு மாசக் கீரைத் தண்டு வேறு போட்டிருந்தான். அதுவும் வளர்ந்தது.

இந்தச் சமயம் பார்த்து எதிரே குடிசை போட்டிருந்த சின்னத்தம்பி ஆட்டுக்குட்டி ஒன்றை வாங்கி வளர்க்க