பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

குமரியின் மூக்குத்தி

"கீரைப்பாத்தியையா? நீ தான் கோட்டை மாதிரி வேலி கட்டியிருக்கிறாயே! அதைத் தாண்டி எப்படி ஐயா வரும்?"-இது யோசனையின்மேல் வரும் கேள்வி.

"ஆடு வந்த அடையாளமும் அது கடித்த அடையாளமும் இருக்கிறபோது, நீ ஒன்றும் நடக்காதது போலப் பேசுகிறாயே?"

"என் ஆடுதான் கடித்தது என்பதற்கு அடையாளம் இருக்கிறதா?”

"ஏ முட்டாள்! இங்கே கண் முன்னாலே உன் ஆடு தானேடா வளைய வருகிறது?" என்று கோபம் தாங்காமல் பேசினான் விசாகன்.

"இந்தா, முட்டாள், கிட்டாள் என்று பேசினால் அப்புறம் எனக்குக் கெட்ட கோபம் வந்துவிடும். உனக்குத் தான் பேசத் தெரியுமென்று எண்ணாதே..."

இதற்குள் விசாகன் மனைவி வந்து, "ஆபீஸிலிருந்து வந்ததும் வராததுமாக அவனோட என்ன பேச்சு? வாருங்கள் உள்ளே!" என்று அழைத்தாள். விசாகன் மறுபடியும் கத்தினான்.சின்னத்தம்பியும் இரைந்து பேசினான்.விசாகன் மனைவி அவனைஉள்ளே கையைப் பிடித்து இழுத்துச் சென்றாள் சின்னத்தம்பி மீசையை முறுக்கினபடியே தன் குடிசைக்குப் போய்விட்டான்.

2

சண்டையோ சமாதானமோ, அதெல்லாம் ஆட்டுக்கா தெரியும்? அது எப்படியோ திருட்டுத்தனமாகக் கீரைப் பாத்தியைத் துவம்சம் செய்து வந்தது. விசாகன் சின்னத் தம்பியின் ரிக் ஷாவில் ஏறவில்லை. வீட்டுக்கு எதிரே வா என்று அழைத்தால் வாசலில் நிற்கும் ரிக் ஷாவில் ஏறுவது எப்படி? நாமாகத் தேடிக்கொண்டு போவது எப்படி? இருந்தாலும் அந்தப் பயலுக்குப் புத்தி புகட்ட வேண்டும் என்றே அவனைக் கூப்பிடுவதில்லை. சின்னத்தம்பி இதனால்