பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கீரைத் தண்டு

31

அயர்ந்தவனாகத் தோன்றவில்லை. 'இவர் இல்லாவிட்டால் இன்னொருத்தர்' என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது.

விசாகன் வேலியைப் பின்னும் செறிவாகப் போடத் தொடங்கினான். அங்கங்கே குறுக்கே குச்சியைக் கட்டினான். புதிய கீரைப் பாத்தி போட்டான். சில இடங்களில் வேலிக் காலில் முள்ளுச் செடியை வைத்தான். ஆட்டுக்குப் பயந்து வீட்டுக்கு அரண் போட்டான். ஆடோ அந்த அரணை எப்படிக் குலைக்கலாம் என்று ஆராய்ச்சி செய்துவந்தது.ஒருமாசம் சென்றது. மேலும் இரண்டு வாரங்கள் ஆயின.பாத்தியில் ஒரு சாணுக்கு மேல் முளைக்கீரை வளர்ந்திருந்தது.

அன்று சனிக்கிழமை.எப்படியோ ஆடு வேலி யாகிற கோட்டையில் ஒரு நுழைவிடத்தைக் கண்டு பிடித்து விட்டது. பகல் இரண்டுமணி இருக்கும். உள்ளே நுழைந்து கீரையைப் பலகாரம் பண்ணிக் கொண்டிருந்தது. அப்போதுதான் காரியாலயத்திலிருந்து வந்து வீட்டுக்குள் நுழைந்தான் விசாகன். சனிக் கிழமையன்று பாதி நாள் வேலை என்று ஆட்டுக்குத் தெரியவில்லையே! நுழையும் போதே வீட்டுக்குப் பக்கத்தே கண்ணை ஒட்டும்போது அவனுக்குப் பகீரென்றது. நுழையும் இடத்தில் ஒரு கல் இருந்தது. அதை எடுத்து ஆட்டின்மேல் ஆத்திரத்தோடு வீசினன். அது பாவம் முளைக்கீரையின் சுவையிலே உலகையேமறந்திருந்தது.கல்சரியாகஅதன் பின்னங்கால் ஒன்றைத் தாக்கியது. வேகமான தாக்குதல், மே என்று அலறிக்கொண்டு அது பாயத் தொடங்கியது.கால் ஒடிந்து விட்டது. முன்னங்காலனாலும் நொண்டி நொண்டி ஒடும். இப்போது பயத்தால் ஒடப் பார்க்கையில் நடக்க முடியாமல் விழுந்தது. சற்று அருகிலே போய்ப் பார்த்தான் விசாகன். பாவம், படுகாயம்! பின்னங்கால் துண்டுபட்டது போல் ஆகிவிட்டது ரத்தம் வழிந்தது. ரத்தத்தைக் கண்ணாலே கண்ட போது அவனுக்கு வயிறு