பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

குமரியின் மூக்குத்தி

புளிக்கரைத்தது. வாய்ப் பேச்சில் வீரமே ஒழிய அவன் மனசு கோழை மனசு, ஆடு திணறியது; நடுங்கியது. பேசாமல் அதை மெதுவாக இழுத்து வந்து வாசலில் விட்டு விட்டுக் கேட்டைப்பூட்டிக்கொண்டுஉள்ளுக்குக் குள்ளே போய்விட்டான்.

அவன் நெஞ்சு படபடத்தது. ஆட்டுக்கு என்ன ஆகுமோ என்ற பயம், சின்னத்தம்பி சண்டைக்கு வந்து விடுவானேஎன்ற திகில். திருடனுக்குத் தேள் கொட்டினது போல ஒன்றையும் வெளியிடாமல், ஒன்றிலும் மனம் ஓடாமல் திருதிரு வென்று விழித்துக் கொண்டே இருந்தான்.

எதிர்க் குடிசையில் சின்னத்தம்பி கத்திக் கொண்டிருந்தான். எந்த அகராதியிலும் இல்லாத வார்த்தைகள் அவன் திருவாயி லிருந்து வெள்ளமாக வந்தன. ஆட்டை அடித்தவன் யார் என்று சொல்வது? எதிர் வீட்டு விசாகன் என்றால் அவன் வீட்டுக்குள் ஆடு நுழைந்ததா? அதை முதலில் ஒப்புக் கொண்டாக வேண்டுமே;ஒப்புக்கொள்வ தானால் முன் குற்றங்களையும் ஒப்புக் கொள்ள வேண்டுமே! பொதுவாகவும் குறிப்பாகவும் வாய்க்கு வந்தபடி திட்டிக் கொண்டே யிருந்தான் அவன்.

வெளியிலே தலை காட்டாமல் வீட்டுக்குள் எவ்வளவு நேரம் கொட்டுக் கொட்டென்று உட்கார்ந்து கொண்டிருப்பது? எங்காவது பிரசங்கம் கேட்டுவிட்டு வரலா மென்று புறப்பட்டான் விசாகன். மயிலாப்பூர் கபாலி கோயிலில் அன்று முருகனைப்பற்றி யாரோ பேசினார்கள். முருகனைக் குல தெய்வமாக வழிபடுபவன் விசாகன். அவன் அங்கே போனான். பிரசங்கி ஒரு கட்டத்தில் அஹிம்சையைப் பற்றியும் புலால் மறுத்தலைப்பற்றியும் பேசினார்."சைவம் என்பதற்குச் சிவ சம்பந்தம் என்று பொருள். ஆனல் பொது மக்கள், சைவம் என்றால் புலால் உண்ணாமை என்று நம்புகிறார்கள். சைவ சமயம் அஹிம்சை