உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

குமரியின் மூக்குத்தி

முதலில் அவன் சின்னத்தம்பியின் மகனைக் கூப்பிட்டு ரிக் ஷா கொண்டு வரச் சொல்லி ஏறினான். பிறகு அவனையே கூப்பிட்டு மெல்ல ஆட்டின் நிலையை விசாரித்தான். அதன் காலில் மூலிகை வைத்துக் கட்டி வருவதாகத் தெரிந்து கொண்டான். எப்படியாவது அந்த ஆட்டுக்கு அபராதம் செலுத்த வேண்டுமென்ற எண்ணம் அவ னுக்கு இருந்தது. அதற்கு என்ன வழி?

"ஆட்டுக்கு என்னதீனிஅப்பாபோடுகிறாய்?" என்று சின்னத்தம்பியைக் கேட்டான்.

"அரசிலை வெட்டிப் போடுகிறேன் ” என்றான் அவன்.

"அது புல் தின்னுமா?" என்று கேட்டான் விசாகன்.

"புல் வாங்கக் காசு ஏது?”

"நான் தருகிறேன்" என்று நாலணாவை எடுத்துக் கொடுத்தான் விசாகன். அன்று ராத்திரி அவனுக்கு நன்றாகத் தூக்கம் வந்தது.

இரண்டு நாள் கழித்து அவனுக்கு ஒரு புது யோசனை தோன்றியது. அது மிகவும் பொருத்தமான பரிகாரம் என்று எண்ணினான்.தன் வீட்டுப்பாத்தியிலிருந்து சில கீரைத் தண்டுகளைப்பறித்துக்கொண்டு போய்த் தானே அந்த ஆட்டுக்குப்போட்டான்.

"கீரைத் தண்டு எதற்குச் சாமி ஆட்டுக்கு?" என்று கேட்டான் சின்னத்தம்பி.

நான் ஒரு சொப்பனம் கண்டேன்.என்அம்மா சொப்பனத்தில் வந்து ஆட்டுக்குக் கீரை வாங்கிப் போடடா என்று சொன்ன மாதிரி கண்டேன்" என்றான் விசாகன். முன்பே தீர்மானித்து வைத்திருந்த பதில்.

சின்னத்தம்பி ஏன் ஆட்சேபிக்கிறான்? அல்வாவைக் கொண்டு வந்து ஊட்டட்டுமே! அவன் ஆட்டுக்குத்தானே நல்லது! இரண்டு நாளைக்கு, மூன்று நாளைக்கு ஒருமுறை ஆட்டுக்குக் கீரைத்தண்டு கொடுப்பதை ஒரு விரதமாகவே