பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

குமரியின் மூக்குத்தி

உன் ஆட்டுக்குப் போடு" என்று அவன் கையில் கொடுத்தான்.

சின்னத்தம்பி அதை வாங்கியபடியே,"இனிமேல் நீங்கள் கீரைத் தண்டு வாங்க வேண்டிய வேலை இல்லை, சாமி” என்று புன்னகை பூத்தபடியே சொன்னான்.

"ஏன்?" என்று கேட்டான் விசாகன்.

"அதை.ராவுத்தருக்கு விற்றுவிட்டேன்."

"ராவுத்தார்?அது யார், அப்பா?"

"கசாப்புக் கடை வைத்திருக்கிறாரே, அந்த ராவுத்தர்!”

"ஹா"

விசாகன் இடிவிழுந்து போனான்.