பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



குழலின் குரல்

41

இனி எழுந்திருக்காது. அவனோடு காட்டுக்கு வராது. அதன் தொண்டையிலிருந்து காட்டின் அந்தகாரத்தையும் கிழித்துக்கொண்டு வரும் இன்பக் கீச்சொலி எழும்பாது. கொடி போல இருந்த உடல் மரமாகிவிட்டது. இனி என் செய்வது!

இரண்டு மூன்று நாட்கள் உண்ணாமல் உறங்காமல் அவன் கதறினான்.அந்தச் சோகக் களத்திற்கு வந்து பார்க்க யாருக்கும் தைரியம் இல்லை. ஆனாலும் தூரத்தில் எல்லோருமே கூட்டமாக வந்து நின்றுகொண்டு பார்த்தார்கள். முருகன் இப்போது பசியினாலும் சோகத்தாலும் மயக்கம் போட்டு விழுந்துவிட்டான்.

துாரத்தில் நின்றவர்கள்,அவனும் பிணம்போலக் கிடப்பதைக் கண்டார்கள். மெல்ல நெருங்கிப் பார்த்தார்கள்.அவன் மயங்கிக் கிடந்ததை அறிந்துகொண்டார்கள்.மூச்சு மெல்ல வந்து கொண்டிருந்தது. தண்ணீரை முகத்தில் தெளித்தார்கள். அவன் கண்ணை விழித்தான். சிறிது கனியைத் தந்தார்கள்.பாதி மயக்கத்தில் அதை உண்டான். பிறகு தெளிவு பிறந்தது.

"ஏன் என்னை விழிக்கச் செய்தீர்கள்!" என்று அழுதான்.

அவர்கள் அவனிடம் பயந்துகொண்டே ஆறுதல் கூறினார்கள்.அந்த உடம்பினால் இனி ஒன்றும் பயன் இல்லை என்று எடுத்துச் சொன்னார்கள். நாள் ஆக ஆக அவ்வுடல், உருவிழந்து நாற்றம் அடிக்கத் தொடங்கியது. அவன் அதை அணுகுவதற்குக் கூசினான்.

எப்படியோ ஆறுதல் கூறி மெல்லியின் உடலைக் கொண்டு போய்ப் புதைத்தார்கள். அவனுடைய விருப்பப் படியே நாள்தோறும் சென்று அமர்ந்துகொண்டு அளவளாவும் மூங்கிற்புதரின் அடியில் அடக்கம் செய்தார்கள்.

அன்று தொடங்கி அவன் மற்ற வேலைகளை மறந்தான். அருவிக்கரையில் மூங்கிற் புதருக்கு அடியில் வந்து உட்