பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

குமரியின் மூக்குத்தி

கார்ந்து ஒரேயோசனையில்ஆழ்ந்திருப்பான். மெல்லி நிலத்தைப் பிளந்துகொண்டு தன் நல்லுருவத்தோடு வந்து தன் முன் நிற்கப் போகிறாள் என்ற பைத்தியக்காரக் கற்பனை ஒன்று அவனுக்கு உண்டாயிற்று.ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும்அங்கேசென்று நெடுநாழிகை அப்படியே அமர்ந்து கொண்டிருப்பான். காட்டிலே அவள் பிரிந்து சென்றுவிட்டால்,"மெல்லி!” என்று கூவி அழைப்பானே, அப்படிக் கூவி அழைப்பான். அந்தக் குரலே எதிரொலிக்குமே யன்றி மெல்லியின் பெண்மைக்குரல் எழாது. ஒரு கால் தான் புதைந்திருக்கும் இடத்திலிருந்து மெல்லி குரல் கொடுப்பாளோ! அவன் தன் காதை அவளைப் புதைத்தஇடத்தில்வைத்துப் பார்ப்பான். அப்படியே நெடுநேரம் படுத்துக் கிடப்பான். பாவம்! ஏமாற்றத்தை யன்றி அவனுக்கு வேறு என்ன கிடைக்கும்?

ஏதேனும் பறவை கீச்செனக் குரல் எழுப்பினால்,அவள்தான்கூவுகிறாளோஎன்று மயங்குவான். பிறகு உண்மை தெரிந்து வாடுவான்.

மாதக்கணக்கில் அவன் இப்படியே பொழுது போக்கினான். மெல்லி கிடந்த நிலத்தில் பசுமை படர்ந்தது. அங்கிருந்த மூங்கில்கள் ஓங்கி வளர்ந்தன. அவன் துயரமும் வளர்ந்ததே யன்றிக் குறையவில்லை.

2

காதை நெறித்துக்கொண்டு கேட்டான். "ஆம்! மெல்லியின் குரல்தான்!” என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான். அதில் சொற்களின் உருவம் தோன்ற வில்லையே யன்றி அந்தக் குரல்-இனிய உயிரை உருவும் குரல்-அவளுடையதுதான் என்பதில் சந்தேகமே இல்லை.

காற்று வீசிக்கொண்டிருந்தது. அதனோடு இடை விட்டுவிட்டு அந்தக் குரல் கேட்டது. அவன், "மெல்லீ"