உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

குமரியின் முக்குத்தி

மூங்கிலிலிருந்து கொண்டு மெல்லி அழைப்பதாக முருகன் எண்ணினான் ஒலிவந்த மூங்கிலுக்கு அருகே சென்றான். காற்று வீசும்போதெல்லாம் அந்த ஒலி எழுந்தது. நிச்சயமாக மெல்லி அந்தச் சிறு மூங்கிலுக்குள்ளேதான் புகுந்து கொண்டிருக்கிறாள் என்று நம்பினான். அங்கேயே உட்கார்ந்து கொண்டிருந்தான். பசித்தபொழுது கீழே இறங்கிக் காட்டிற்குள் சென்று கனியையும், காயையும் பறித்து உண்டு விட்டு வந்து மறுபடியும் மூங்கிலின் மேல் ஏறிஉட்கார்ந்து கொள்வான்.

ஒரு வாரம்ஆயிற்று.அவனுக்குஒருயோசனை தோன்றியது.இந்த மூங்கிலை ஒடித்துக் கொண்டு தன் குடிலுக்கே போனால் என்ன என்றஎண்ணம் உண்டாயிற்று.சில நாழிகை யோசனையில் ஆழ்ந்தான்.கடைசியில் மளுக்கென்று அந்த மூங்கிலின் நுனிப் பகுதியை ஒடித்தான்; வீட்டுக்குக் கொண்டு போனான்.அதை வைத்துக்கொண்டு கொஞ் சினான். கண்ணில் ஒற்றிக்கொண்டான், முத்தமிட்டான்.

குடிலுக்குக் கொண்டுபோன பிறகு அதில் ஒலி எழும்பவில்லை.ஒருகால் அந்த இடத்தில் இருந்தபடியே தான் குரல் எழுப்புவாளோ? மறுபடியும் அதை அருவிக் கரைக்குக் கொண்டுபோனான். அதில் ஒலி எழவில்லை."ஐயோ! நான் அவளை ஒட்டி விட்டேனே!" என்று அழுதான். மறுபடியும் என்னவோ தோன்றிற்று. மூங்கிலை எடுத்து ஒரு துளையில் வாயை வைத்து முத்தமிட்டான். அப்போது ஒரு பெருமூச்சு வந்தது. அதனால் சிறிது ஒலி வந்தது. மறுபடியும் அவன் ஆராய்ச்சி செய்யத் தொடங்கினான்.கடைசியில் வாயை வைத்து ஊதினால் அந்த ஒலி உண்டாவதை அறிந்தான்.அதுமுதல்அதைஊதிக்கொண்டே இருந்தான். அவன் காற்றாகப் பேசினான்; அவள் வெறும் ஒலியாகப் பேசினாள்.

குழலின் ஒலியைப் போன்ற குரல் மெல்லிக்கு இருந்தது. அவள் உயிரோடு இருந்த காலத்தில் அவள் குரல்