பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

குமரியின் மூக்குத்தி

படக்காரன் மேலிருந்த தலைவர் நடராஜன் படத்தை மெல்ல எடுத்தான். என்ன ஆச்சரியம்! உள்ளேயும் நடராஜன் படம்! க. ம. கட்சித் தலைவர் நடராஜன் அல்ல; முருகேசனுடைய குலதெய்வமாகிய நடராஜன். ஆம்! பூஜை யறையிலே இருந்த அந்த நடராஜப் பெருமான்.

அப்படியானல் இத்தனை காலமும் நடந்த விழாக்கள்-?

அடுத்த நாளே முருகேசன் கடவுள் மறுப்புக் கட்சியினின்றும் விலகிக் கொண்டான். அவன் வீட்டுக் கூடத்தில் மறைந்து நின்று அவனுடைய பூஜையை ஏற்ற நடராஜப் பெருமான் வெளிப்பட்டுவிட்டார்!

இதோ முருகேசன் வாயாரப் பாடுகிறது காதில் கேட்கிறது:

"தன்மை பிறரால் அறியாத
தலைவா! பொல்லா நாயான
புண்மை யேனை ஆண்டு.ஐயா
புறமே போக விடுவாயோ?
என்னை நோக்கு வார்யாரே?
என்நான் செய்கேன் எம்பெருமான்?
பொன்னே திகழும் திருமேனி
எந்தாய் எங்குப் புகுவேனே?" !

--திருவாசகம்.