பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

குமரியின் மூக்குத்தி



"மனிதர்களுடைய மனசை நினைக்கிறபோது விசித்திரமாக இருக்கிறது!’ என்றாள் அவர் மனைவி,

"என்ன விசித்திரத்தைக் கண்டுவிட்டாய்?" 'நீங்கள் வேலுவை வேலையை விட்டு நீக்கப் போகிறீர்களாமே?” -

ராஜாராம் நிமிர்ந்து உட்கார்ந்து அவளை விழித்துப் பார்த்தார். "என்ன உளறுகிறாய்?" என்று கேட்டார்; அதில் கோபத்தின் நிழல் இருந்தது.

"இன்று அந்தப் பெண் வந்திருந்தாள். அவள் ஒரு பாட்டம் என்னிடம் அழுதாள். அவளைத் தேற்றி அனுப்பினேன்."

'என்ன விஷயம்?" -

"நீங்கள் கார் ஒட்டக் கற்றுக்கொண்டு விட்டீர் களாம். வேலுவின் உதவி உங்களுக்குத் தேவை இல்ல யாம். அவனை வேறே எங்காவது வேலைக்குப் போகும்படி முன்பே சொன்னிர்களாம். இப்போது அ வ னு க் கு வேலையே கொடுக்காமல் தண்டத்துக்குச் சம்பளம் தருகிறீர்களாம் என்றைக்காவது ஒரு நாள், இங்கே உனக்கு வேலை இல்லை. எங்காவது போ' என்று சொல்லப் போகிறீர்களாம். இதை நினைத்து நினைத்து அவன் வேதனைப் பட்டுச் சாகிறாளாம். இந்தப் பிள்ளை வயிற்றில் வந்ததிலிருந்து ஒன்றும் சுகம் இல்லையம்மா. பழையபடி தோட்ட வேலை செய்துகொண்டாவது இருப்பேனே என்று அவர் அழுகிறார். நீங்கள்தான் ஐயாவிடம் சொல்லிக் காப்பாற்ற வேண்டும் என்று அழுதாள். அவனை அனுப்பிவிட வேண்டும் என்று உங்களுக்கு எண்ணம் உண்டா?'

நான் அவனுடைய நன்மைக்காகத்தான் கார் ஒட்டப் பழகிக்கொண்டேன். ஏழு மணிக்கு வீட்டுக்குப் போடா என்று சொன்னேன். அவன் எப்போதும் கார் ஒட்டினபோது அவள் வந்து அழுதாள். அவனுக்குச் செளகரியமாக அதிக வேலை கொடுக்காமல் கான் கார் ஒட்