பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவள் குறை

 63


டும் போதும் அவள் அழுகிறாள். அவன் நம் வீட்டுப் பிள்ளை. அவனை அனுப்புகிறதாவது!" என்றார் சிரித்தவாறு.

4

.

ஒரு வாரம் கழித்து ராஜாராம் வேலுவுக்கு ஒரு புது உத்தரவு போட்டார். 'பகல் முழுவதும் நீதான் கார் ஒட்டவேண்டும்; எனக்கு அலுத்துவிட்டது. வழியிலே குறுக்கே போகிற கிழவியையும் எதிரே வருகிற வண்டியையும் முன்னே போகிற லாரியையும் சபித்துக்கொண்டே கார் ஒட்ட வேண்டியிருக்கிறது. போதும், இந்த வேலை. இனிமேல் கார் உண்டு, நீயுண்டு. நீ எங்காவது ஒட்டிக் கொண்டு போனால் நான் வருகிறேன்!"

'எசமான்' வேலுவுக்குப் பேச்சு வரவில்லை. "ஆலுைம் எனக்குப் பழக்கம் விட்டுப் போகக்கூடாது பார். ராத்திரி எங்கேயாவது அவசரமாகப் போகவேனு மானால நானே ஒட்டிக்கொள்கிறேன். அப்போது மாத்திரம் காரை என்னிடம் கொடுக்க வேண்டும். என்ன, உனக்குச் சம்மதமா?” -

எசமான்' அவன் கண்ணில் நீர் துளித்தது. அவருக்குத் தெரியாமல் துடைத்துக்கொண்டான்.

வேலுவின் மனைவிக்கு ஆசுபத்திரியில் குழந்தை பிறந்தது. ராஜாராமும் அவர் மனைவியும் போய்ப் பார்த்தார்கள். - -

'அம்மா, நீங்கள் இட்ட பிச்சை!” என்று நன்றியறிவுடன் வேலுவின் மனைவி அவளுக்குக் குழக்தையை எடுத்துக் காட்டினாள்.

'என்ன பேர் வைக்கப்போகிறாய்?' என்று கேட்டாள் எசமான் மனைவி.

"அது-அவங்க-ஐயா பேரைத்தான் வைக்க வேணுமென்று சொல்றாங்க!' என்று நாணிக்கொண்டாள் அப்பெண். - -