பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

குமரியின் மூக்குத்தி


"அந்தப் பேரைச் சொல்லி நான் கூப்பிட முடியாதே!" என்றாள் அம்மாள்.

"நாங்கள் மாத்திரம் கூப்பிடுவோமா? பள்ளிக்கூடத்துப் பேர் அது; கூப்பிட வேறு பேர் நாங்கள் முடிவு பண்ணிவிட்டோம்: முருகா என்று கூப்பிடுவோம்” என்றாள் அந்தப் பெண்.

இவ்வளவு நேரம் சும்மா இருந்த ராஜாராம், பேஷ்!” என்று குதூகலத்தோடு சொன்னார். அவர் முருகபக்தர் அல்லவா?