பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொள்ளேயோ கொள்ளை

69

நாளாக ஆக அபராதம் செலுத்த முடியாதவர்கள் தொகை அதிகமாயிற்று. அவர்கள் யாவருக்கும் வேலே கொடுக்க அரசாங்கத்தில் வேலை இல்லை. ராஜ்யத்தில் உள்ள பெரிய வியாபாரிகளிடம் சிலரை அனுப்பினார்கள். "குற்றவாளிகளை நாங்கள் வேலைக்கு வைத்துக்கொள்ள மாட்டோம்” என்று சொல்ல அவர்களுக்குத் தைரியம் இல்லை. ஆகையால் வேலைக்கு எடுத்துக்கொண்டதாகப் பாவித்து அவர்களுக்குரிய சம்பளத்தை மாத்திரம் கஜானாவில் கட்டிவந்தார்கள். குற்றவாளிகள், "வேலை கொடுங்கள்' என்றபொழுது, "வேலையே செய்யவேண்டாம். உங்கள் விருப்பப்படி எங்கே வேண்டுமானலும் போங்கள்"’ என்று சொல்லிவிட்டார்கள். -

இந்தக் கட்டணங்களால் அரசாங்க வருவாய் அதிகமாயிற்று. அரசருக்குச் சேனாபதியினிடம் அபாரத் தயை உண்டாயிற்று, சம்பளத்தை இரட்டிப்பாக்கினார். மந்திரிகளுடைய சம்பளத்தையும் கூட்டினார். அவரும் தம் அந்தப்புரத்தை விரிவாக்கினர்.

மறுபடியும் செலவுக்குப் பணம் போதாது என்ற நிலை வந்தது. மந்திராலோசனை கடந்தது. இப்போதெல்லாம் சேனதிபதியின் வார்த்தைக்குத்தான் செலாவணி அதிகம்.

"என்ன செய்யலாம்?' என்று அரசர் கேட்டார்.

"திருடுகிறவர்களைக் கையும் மெய்யுமாகப் பிடித்து அவர்கள் கையிலுள்ள பொருள்களை வாங்கி உரியவர்கவளிடம் கொடுத்துவிடும் வழக்கம் இப்போது இருக்கிறது. அதற்குமேல் திருடனுக்கு இப்போது அபராதம் போடுகிறோம். இந்த முறையைச் சிறிது மாற்றினால் வருவாய் அதிகமாகலாம்' என்று சேனாபதி சொன்னார்.

"எப்படி மாற்றுவது?'

"நம்முடைய முதல் மந்திரி முதலிய பெரியவர்களுக்கு நான் சொல்வது பொருத்தமாகத் தோன்றினால் எடுத்துக் கொள்ளட்டும். இல்லாவிட்டால் தாட்சண்யமில்லாமல்