உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொள்ளேயோ கொள்ளே

71

யாகிவிட்டார். இரண்டு வேலையையும் அவரே பார்த்துக் கொண்டார்.

புதிய சட்டத்தின்படி திருடர்கள் அபராதம் செலுத்தத் தொடங்கினார்கள். எல்லோருடைய வீட்டிலும் திருட்டுப் போயிற்று. திருட்டுக் கொடுத்தவர்கள் தம் பொருள்கள் இன்ன மதிப்புடையன என்று சொல்லிப் புலம்புவதோடு சரி; அதற்குமேல் இழந்த பொருளுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லே.

திருடர்கள் பாதிப் பங்கை அபராதமாகச் செலுத்தி வந்தார்கள். முன்னிலும் அதிகமாகப் பொக்கிஷத்தில் பணம் சேர்ந்தது. சேனாபதியாகிய முதல் மந்திரிக்குப் பெரிய மாளிகையை அரசாங்கத்தில் கட்டிக்கொடுத்தார்கள். அவர் தாமாக அதில் ஒரு சிறிய அந்தப்புரத்தையும் கட்டிக் கொண்டார்.

சேனாபதிக்கு இப்போது அரசரைவிட அதிகாரம் மிகுதியாயிற்று. அவர் ராஜபோகம் அநுபவித்தார். ஆகவே, அவருடைய சொந்தச் செலவு கணக்கு வழக்கு இல்லாமலே வளர்ந்து வந்தது. அதைச் சரிக்கட்ட அரசாங்கத்திலிருந்து வரும் வருவாய் போதுமா? அதனால் வேறு வகையில் வருவாயைப் பெருக்கிக்கொள்ள எண்ணினார். ஒர் அரசாங்கத்தின் முட்டுப்பாட்டைப் போக்க வழிகண்ட அவருக்குத் தம் செலவுக்குப் பணம் தேடுவது பெரிய காரியமா?

முன்பே அபராதம் செலுத்தின திருடர்களே அந்தரங்கமாக அழைத்தார். "உங்களுக்கு உபகாரமாக ஒரு காரியம் செய்யலாமென்றிருக்கிறேன். பொருளை இழந்தவர்கள் தாம் இழந்ததை அப்படியே சொல்லிவிடுகிறார்கள். அதில் பாதியை நீங்கள் அரசாங்கத்துக்குக் கொடுக்க வேண்டி வருகிறது. நான் முதலாளிகளை அழைத்து ஒர் ஒப்பந்தம் செய்து வைக்கலாம் என்று நினைக்கிறேன்” என்று தம் கருத்தை விளக்கினர். அவர்கள் ஒப்புக்கொண்ட பிறகு, திருட்டுக் கொடுப்பவர்களைத் தனியே அழைத்துப்