பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

குமரியின் மூக்குத்தி

அதன் சுடர் அலைகள் அவனுடைய உள்ளத்தில் ஒரு சிறிய ஆசை அலையை எழுப்பின. அவன் தன் மாதேவியை நினைத்தான். அவளுடைய மூக்கு அவனுடைய நினைவுக்கு வந்தது. கற்பனையினால் அம்பிகையின் மூக்குத்தியைத் தன் பட்டத்தரசியின் மூக்கில் பொருத்திப் பார்த்தான்.

அந்தச் சமயத்தில், “அகோ வாரும் பிள்ளாய்! பாண்டிய மகாராஜனே!” என்ற ஒலியைக் கேட்டு அம்மன்னன் திடுக்கிட்டுப் போனான். கன்னியாகுமரிக்கு முன் எரிந்து கொண்டிருந்த விளக்கைப் பிடிக்கும் பதுமை ஒன்றுதான் அவனை அழைத்தது. அது வாய் திறந்து பேசுவதை அவன் கண்ணாற கண்டான்; காதால் கேட்டான். பதுமை பேசத் தொடங்கியது.

ஹேபராக்கிரம பாண்டியனே! என்ன அபசாரம் செய்யத் துணிந்துவிட்டாய்! கன்னி பகவதி சொத்தைக் கொள்ளையிடலாமா? உன்னுடைய குடும்பத்தையே பாதுகாக்கும் தாயின் ஆபரணத்தின்மேல் உன் இச்சையை வீசினாயே! இது நியாயமா? அம்பிகை உன்னிடம் கருணை கொண்டவள்; ஆதலால் நீ இப்படி எண்ணியும் இங்கே நிற்கிறாய். இல்லாவிட்டால் உன் கண் இந்தக் கணத்தில் குருடாயிராதா? அது கிடக்கட்டும். ஶ்ரீ மாதாவாகிய அம்பிகையின் நாசிகாபரணத்தைப்பற்றிய கதை உனக்குத் தெரியுமா? தெரிந்திருந்தால் உனக்கு இந்த அடாத ஆசை தோன்றியிராது. ஆகையால், இப்போது அந்தக் கதையைச் சொல்கிறேன் கேள்.

ஈசனம் இல்லாச் சிறப்புடைய மீனவர் குலத் தோன்றலே! கலிங்கத்து மகா யுத்தத்தைப்பற்றிக் கேட்டிருப்பாயே! கலிங்க அரசனான அனந்தபதுமன் சோழ நாட்டுக்குக் கப்பம் செலுத்தாமையால் குலோத்துங்க சோழன் அவனோடு போர் செய்து வென்றான் என்பது தமிழ் நாட்டி