பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

குமரியின் மூக்குத்தி

கொண்டு தம்முடைய வித்தைகளைச் சொல்லிக் கொடுத்தார். பரம்பரை வித்தை எளிதிலே பரமசிவ சாஸ்திரியாருக்கு வந்துவிட்டது. பையன் எப்படியாகிலும் பிழைத்துக்கொள்வான் என்ற முழு நம்பிக்கையுடன் அவருடைய தங்தையார் கண்மூடினார்.

இப்போது பரமசிவ சாஸ்திரியார் மந்திர சாஸ்திரத்தில் வல்லவர் என்று பெயர் எடுத்தார். என்ன எடுத்து என்ன பிரயோசனம்? ஜோசியத்தையும் மந்திரத்தையும் கட்டி அழுகிறவர்களேத்தான் சனி பகவான் அடைக்கலம் புகுந்து கிரந்தரமாக அவர்களிடம் இருந்துவிடுகிறானே! சாஸ்திரியார் குழந்தை குட்டிகளோடு வறுமையையும் வளர்த்து வந்தார்.

தம்முடைய கண்பர் விசுவநாத ஆசாரியார் இப்போது ஒரளவு செயலாக இருப்பது தெரிந்து அவருக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று. இரண்டு நண்பர்களும் அடிக்கடி கலந்து பேசுவார்கள். ஆசாரியார் ஏதோ தம்மாலான உபகாரத்தைச் சாஸ்திரியாருக்குச் செய்வதுண்டு. நேரே கொடுத்தால் அவர் வாங்கிக் கொள்ளமாட்டார் என்று, ஏதோ தகடென்றும் தாயித்தென்றும் பேர் சொல்லி வாங்கிக் கொண்டு பொருள் கொடுப்பார்.

ஒருநாள் சாஸ்திரியார் தம் நண்பருக்கு ஒரு யோசனை கூறினர். "நீ இந்த மாட்டையும் குதிரையையும் யானேயை யும் செய்து விற்கிறாயே! உனக்கோ திறமை இருக்கிறது. உன் உளி நினைக்கிறதையெல்லாம் உருவாக்கி விடுகிறது. நல்ல தெய்வ பிம்பங்களாகச் செய்தாயானால் உனக்குப் புண்ணியமும் லாபமும் அதிகம் ஏற்படும்” என்றார்.

"என்ன செய்யவேண்டும்? அதைச் சொல்லுங்கள்; செய்து பார்க்கிறேன்."

"ராமன், கிருஷ்ணன், முருகன் என்று பல மூர்த்திகளைச் செய்யலாம். எவ்வளவோ அருமையான மூர்த்திகளின் தியான சுலோகங்கள் இருக்கின்றன. அவற்றில்