பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உள்ளத்தில் முள்

77

உள்ளபடி நீ மூர்த்திகளைச் செய்தாயானால் பலர் விரும்பி வாங்கிக் கொள்வார்கள்.'

"எனக்கு அந்த மூர்த்திகளின் லட்சணங்கள் தெரிய வகை இல்லேயே!” என்று அங்கலாய்ப்புடன் சொன்னார் ஆசாரியார்.

"அதைப்பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய்? நான் அந்தத் தியான சுலோகங்களின் பொருளை விளக்கமாகச் சொல்கிறேன். நீ அதன்படியே விக்கிரகங்களைச் செய்யலாம்" என்று சாஸ்திரியார் கூறினார்.

அதுமுதல் விசுவகாத ஆசாரியார் முழுக்க முழுக்கத் தெய்வத் திருவுருவங்களேயே சமைத்து வந்தார். பலர் அவருடைய பிரதிமைகளே வாங்கத் தொடங்கினார்கள். சந்தனத்தாலே செய்த திருவுருவங்களை வாங்கிப் பூஜை செய்தார்கள். இதனால் ஆசாரியாருடைய வருவாய் மிகுதியாயிற்று. தமக்கு இந்த வருவாய் வருவதற்குக் காரணம் சாஸ்திரியார் என்பதை அவர் மறக்கவே இல்லை.

சாஸ்திரியார் நவராத்திரியில் சிறப்பாகப் பூஜை செய்வார். அவருக்கு நல்ல சந்தன மரத்தில் ஶ்ரீ ராஜராஜேசுவரியின் உருவத்தைச் செய்து கொடுத்துப் பூஜை செய்யச் சொல்ல வேண்டும் என்பது விசுவநாதருக்கு ஆசை. அவர்கள் ஊராகிய துத்திகுளம் கொல்லிமலை அடிவாரத்தைச் சார்ந்திருந்தது. கொல்லி மலையில் காட்டினிடையே சந்தன. மரங்கள் வளர்ந்திருக்கும். அரசாங்கத்தாரின் கட்டுக் காவலுக்கு உட்பட்டிருந்தாலும் விறகு வெட்டி வருகிறவர்கள் சந்தனக் கட்டையையும் யாருக்கும் தெரியாமல் வெட்டிக்கொண்டு வந்து விற்றுவிடுவார்கள். விசுவநாதஆசாரியார் நியாயமான முறையில் சந்தனக் கட்டைகளைக் கடைகளில் வாங்கி வேலை செய்தாலும், விறகு வெட்டிகளிடம் சில சமயம் மிகவும் அருமையான வைரம் ஏறின கட்டை கிடைக்கும். அதனால் அவர்களிடமும் வாங்குவார். தவறு தான் ஆனாலும் வேறு வழி இல்லாமல் வாங்குவார். அதி