பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குமரியின் மூக்குத்தி

3

னர் யாவருக்கும் தெரியும். சோழ சக்கரவர்த்தியின் மந்திரியாகிய கருணாகரத் தொண்டைமான் இந்தக் கலிங்கத்துப் போரில் வெற்றியடைந்த சிறப்பைக் கலிங்கத்துப் பரணி என்ற தமிழ்ப் பிரபந்தம் சொல்வதையும் நீ அறிந்திருக்கலாம். ஆனால் உலகம் அந்தப் போருக்கு உரிய உண்மைமையான காரணம் இன்னதென்பதை அறியாது. நீ எந்த மூக்குத்திக்கு ஆசைப்பட்டாயோ, அதுதான் கலிங்கப் போருக்கு மூல காரணம். அதைச் சொல்லுகிறேன் கேள்.

ஒரு சமயம் கலிங்க அரசனகிய அனந்தபதுமன் தன் பட்டத்து ராணியோடு தேசாடனம் செய்யப் புறப் பட்டான். அப்போதெல்லாம் சோழனுக்கும் அவனுக்கும் பகைமை இல்லை. சோழனுக்குக் கப்பம் கட்டுபவன் அவன். ஆகையால், அவன் சோழ நாட்டுக்கு வந்தபோது தஞ்சை யில் சில நாட்கள் சோழ அரசனுடைய அரண்மனையில் தங்கியிருந்தான். கலிங்கத்து அரசி பூண்டிருந்த மூக்குத்தி எல்லோருடைய கண்களையும் கொள்ளை கொண்டது. அவர்களிலும் அந்தப்புரத்தில் உள்ள பெண்கள் அதைக் கண்டு கண்டு வியந்தார்கள். குலோத்துங்கனுடைய பட்டத்தரசிக்கு அதனிடத்தில் ஆசையே உண்டாகிவிட்டது. அந்தமாதிரி வைரக்கல் எங்கே கிடைக்கும் என்று விசாரிக்கலானள். எவ்வளவு பொன் கொடுத்தாவது அந்த மூக்குத்தியை வாங்கிவிட வேண்டும் என்ற பைத்தி யக்கார ஆசை அவளுக்கு உண்டாயிற்று.

கலிங்கத்து அரசனும் அரசியும் தேசாடனத்தை முடித்துக்கொண்டு ஊர் போய்ச் சேர்ந்தார்கள். சோழ மன்னனுடைய மாபெருங் தேவிக்கு அந்த மூக்குத்தியின் நினைவாகவே இருந்தது. முடியுடை மன்னனின் மாதேவி யாக இருந்து அதை அணிவதற்கு இல்லேயே என்று அங்க லாய்த்தாள். நாளுக்கு நாள் அந்தக் குறை அவள் உள்ளத் தளவில் நில்லாமல் உடலையும் வருத்தத் தொடங்கியது. தூங்கிக்கொண்டே இருப்பாள் திடீரென்று எழுந்து,