பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உள்ளத்தில் முள்

85

"அப்படிச் சொல்லாதீர்கள். நீங்கள் இதற்குத் தெய்வக் களையை ஊட்டிய மகா முனிவர்; நான் ஆசாபாசத்தில் அகப்பட்டு உழலுபவன்.”

"அப்படிச் சொல்லாதே, அப்பா. நீ அவதார புருஷன்.' மேலே அவர் புகழுரையைக் கேளாமல் புறப்பட்டு விட்டார் கலைஞர். அன்று அவர் யார் சொல்லியும் கேளாமல் அவசர காரியமாக வெளியூர் புறப்பட்டுப் போனார்.

3

ன்று வெள்ளிக்கிழமை, நவமி. சரஸ்வதி பூஜை. வழக்கம்போல் பூஜைக்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்தார் சாஸ்திரியார்; அவருடைய மனைவி அருகில் இருந்து புத்தகங்களை அடுக்கினாள்.

"அம்பிகை எவ்வளவு மூர்த்திகரத்துடன் இருக்கிறாள்! லட்ச ரூபாய் கொடுத்தாலும் இப்படிக் கிடைக்குமா? அரண்மனையில் ராஜ ராஜாக்களிடம் இருக்க வேண்டியவள் இந்த ராஜராஜேசுவரி. இந்த ஏழையிடம் அகப்பட்டுக் கொண்டிருக்கிறாள். அங்கே இருந்தால் அழகான மண்டபம் ஒன்று செய்து அதில் எழுந்தருளச் செய்து பூஜிப்பார்கள். பரம தரித்திரனாகிய நான் எங்கே போவேன்' என்று சொல்லி வாய் மூடவில்லை; "சாமி!" என்ற குரல் கேட்டது. குரலோடு விசுவகாத ஆசாரியார் ஓர் ஆளின் தலையில் ஒரு பெரிய அட்டைப் பெட்டியை வைத்துக்கொண்டு வந்தார்.

"என்ன அப்பா, புதிய சீர்?" என்று கேட்டார் சாஸ்திரியார்,

"அம்பாள் உத்தரவு பண்ணினாள்" என்று சொல்லிக் கொண்டே அட்டைப் பெட்டியைக் கீழே வைக்கச்செய்து பிரித்து உள் இருப்பதை எடுத்து வைத்தார். -

என்ன ஆச்சரியம் இது! வெள்ளியும் தங்கமும் இழைத்துச் செய்த அற்புத மணிமண்டபம், அம்பிகை