பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

குமரியின் மூக்குத்தி

எழுந்தருள்வதற்கு இல்லையே என்று ஏங்கினாரே அந்த மண்டபம்.

"அம்பிகை இந்த மண்டபத்தில் எழுந்தருளியிருக்கட்டும்” என்று சொல்லும்போது கலைஞர் தொண்டை கரகரத்தது. -

"இது கனவா?” என்றார் சாஸ்திரியார்.

"இல்லை, கனவுதான். இதை ஏற்றுக்கொண்டு என்னை மன்னித்துவிடுங்கள்.”

"மன்னிப்பா!"

சாஸ்திரியார் விழித்தார். -

தம் உள்ளத்தில் முள்ளாகக் குத்திய ஆயிர ரூபாயைக் கொண்டு இந்த மணிமண்டபத்தை வாங்கி வந்து கொடுத்த பிறகே இலை போட்டுச் சோறு சாப்பிடுவது என்ற விரதத்தை அந்தக் கலைஞர் மேற்கொண்டிருந்தார் என்பதை அவர் உணர்ந்தால் இன்னும் எப்படி விழிப்பாரோ!