பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குளிர்ச்சி

91

அங்கே கொத்துவேலை செய்துகொண்டிருந்த பெருமாள் என்பவன் , சிற்றாள் வேலை செய்துகொண்டிருந்த ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு சென்று விட்டான். இந்தச் செய்தியே அவர்கள் பேச்சில் அடிபட்டது.

வேலை கடந்துகொண்டிருந்தது. நடுநடுவே அந்தச் சுவையான செய்தியும் சிரிப்பை உண்டாக்கியது. "இந்த அபாயம் காக்காய்க்கு வரவே வராது’ என்று குப்பன் கூறியவுடனே எல்லோரும் கொல் என்று சிரித்தார்கள்.

இருட்டும் திருட்டும் கோழைகள் சொத்து. எனக்கு அந்த அவமானம் என் வருகிறது? எந்தப் பயல் என்னே ஏறெடுத்துப் பார்ப்பான்?" என்று பட்டாசு வெடிபோல வந்தது அழகுவின் பேச்சு. -

"ஆ! உன் அழகை உலகமே பார்த்துக் கண் பூத்துப் போகாதா?’ என்றான் ஒருவன். ... . .

"ஏன், நான் சினிமாக்காரியா?”

பெரியசாமி இப்போது பேசினான்: "அழகு! அந்தச் சோம்பேறிகளுடன் என்ன பேச்சு? கொண்டா சாந்தை இங்கே," அவன் ஒருவன்தான் அவளே அழகு என்று கூப்பிடுகிறவன்.

கட்டிடம் பெரியது. ஆதலால் மாதக் கணக்கில் வேலை நடந்தது. எத்தனையோ புதிய வேலைக்காரர்கள் வந்தார்கள். அவர்களிடையே தெரிந்தும் தெரியாமலும், முறையாயும் முறையில்லாமலும் உறவுகள் நெளிந்தன. அழகுமட்டும் எப்போதும்போல் வேலை செய்தாள். அவள் வேலையை எஞ்சினியர் பாராட்டினார்.

கட்டிடம் முடிகிற சமயம். அப்போது அதற்கு உடையவர் வேலை செய்கிறவர்களுக்குப் பரிசு தர எண்ணினார். பெரியசாமி அவரைத் தனியே பார்த்துத் தனக்கு இன்ன பரிசு வேண்டும் என்று தெரிவித்தான். உடனே அவர் மாணிக்கத்தைக் கண்டு, அந்தப்பரிசு அவனுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்தார்.