பக்கம்:குமாரி செல்வா.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



9


⚫அன்ருெரு நாள் தானாகவே சிரித்துக்கொண்டு தெரு வழியாகப் போன போதுதான் ஆசிரியருக்கு அந்த விபத்து ஏற்பட்டது. பரமசிவம் சூழ்நிலை மறந்து தன் முகத்தில் சிரிப்புத் தீட்டித் திரிவது புதிய விஷய மில்லையே! மேதைகளிடம் காணப்பட வேண்டிய கல்யாண குணம் தன்னிடமும் வளர்வதற்காக அவர். அதிகம் மகிழ்ந்து போவது முண்டு.

அன்று அவர் யாரையோபற்றி எழுதிய எந்த நயத்தையோ எண்ணிச் சிரித்தபடி ஒரு வீதியிலே போய்க்கொண்டிருந்தபோது, திடீரென்று விழிப்புற்று 'இதுதான் பூலோகமா!’ என்று அதிசயிக்க வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்பட்டது.

அது ஒரு கண அதிர்ச்சி. சிலீர் என்ற உணர்ச்சி அவர் கன்னத்திலே பட்டது. யாரோ-அல்லது எதுவோ-வேகமாக வந்து மோதியது போலவும் தோன்றீயது. எதிர்பாராத இந்தத் தாக்குதலினால் திடுக்கிட்ட அவர் விபத்தின் காரண உருவைக் கண்டதும் அதிகம் திடுக் கிட்டார். ’இதென்ன தடிமாடு மாதிரியா......’ என்று வெடித்த சீற்றக் குரல், சுர் சுர்ரென்று திரியிலே பற்றிய நெருப்பு பட்டாஸை வெடிக்க வைக்காமல் புஸ்ஸென அணைந்து விடுவதுபோல், ஒடுங்கி விட்டது.

மேலே வந்து மோதியது தடிமாடோ எருமைக் கன்றுக் குட்டியோ அல்ல. குஷி மிகுந்த குட்டிதான்-பாவாடையும் தாவணியுமணிந்த கோலக் குமாரிதான்-என்பதை உணர்ந்ததும் அவர் கோபம் அவள் கையில் கரைந்து கொண்டிருந்த ஐஸ்க்ரீம் போல் உருவற்றுத் தேய்ந்தது.

கலகலவெனச் சிரித்த குமாரி விலகி நின்று, ஐஸ்க்ரீம் பாழாகிப் பயனற்றுப் போவதைத் தடுப்பதற்காக, தனது சிவந்த உதடுகளினால் ஆர்வமாகச் சுவைத்தாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமாரி_செல்வா.pdf/11&oldid=1315623" இலிருந்து மீள்விக்கப்பட்டது