பக்கம்:குமாரி செல்வா.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



10


ஐஸ்க்ரீமை ரசித்த அவள் கண்களில் தனி யொளி திகழ்ந்தது. 'இஹிஹ' என்று கனைத்தாள்.

பரமசிவத்திற்குக் குளிர்ந்துபோன கோபம் மீண்டும் குடு பெறலாமா, கொதித்துப் பாயலாமா என்று குறி கேட்பது போலிருந்தது. தனது கன்னத்திலே பட்டது அவள் எச்சில் படுத்திய ஐஸ்க்ரீம்தான் என்பது நன்றாகப் புரிந்தது. 'எருமை மாதிரி மேலே வந்து விழுந்த கழுதைக்கு மன்னிப்பு கேட்கணும்னு தோனலை பாரு மேன்! திண்ணிப் பண்ணி! மொக்குது பாரேன் ஐஸ் க்ரீமை! என்று உறுமியது அவர் மனம்.

அழகிய மங்கை ஒரே சமயத்தில் எப்படி மூன்று வித மிருகாவதாரம் எடுத்துக் காட்சி தர முடியும் என்று அவரது அக்தராத்மா கேட்கவில்லை. அவ்வளவு ஆத்திரம் அவருக்கு! இன்னும் சில மிருகங்களின் பெயரையும் கூட்டியிருப்பார். அதற்குள் 'ஏ செல்வா! சட்டி! என்ற குரல் அவர் கவனத்தைக் கவர்ந்தது.

'இந்தக் கழுதைக் குட்டியின் பெயர்தான். போலி ருக்கு!’ என்று நினைத்தார் அவர்.

கையிலிருந்த ஐஸ்க்ரீம் காலியானதும் 'ஸார் ஸார், உங்க சட்டையிலே 'இஹஹ!’ என்று கனைத்தாள் அவள். .

தன் சட்டை மீது சிவப்புக் கறை படிந்திருப்பதை அப்பொழுதுதான் கவனித்த ஆசிரியர் ஒரு நிமிஷத்திற்குள் அவள் ஒரு க்ரீமைத் தீர்த்து விட்டதையும் உணர்ந்தார். அவர் கை கன்னத்தில் சில்லிட்ட இடத்தைத் தடவியது.

'முகத்திலே கூடப் பட்டுவிட்டதா ஸார்! வருத் தம் !’ என்றாள் அவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமாரி_செல்வா.pdf/12&oldid=1315628" இலிருந்து மீள்விக்கப்பட்டது