பக்கம்:குமாரி செல்வா.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

இதுவரை வீட்டினுள் ஜன்னலின் பின்னின்று கவனித்துக் கொண்டிருந்த ஒரு அம்மாள் முன் வந்தாள். ‘நமஸ்காரம் ஸார். குழந்தைக்கு தெரியாது. சிறுசு தானே. விளையாட்டுப் புத்தி, நீங்க உள்ளே வந்து முகத்தை அலம்பிக் கொள்ளுங்கள்’ என்று பவ்வியமாக வேண்டினாள்.

‘அஹம் பப்ளிக் தண்ணிக் குழாய் இல்லாமலா போகும் இந்தப் பக்கத்திலே?’ என்று முறைப்பு காட்டினார் அவர். -

‘மன்னிக்கணும். நீங்கதான் வால் நட்சத்திரம் ஆசிரியர்னு தெரிந்த பிறகும் உங்களுக்கு மரியாதை செய்யாமல் அனுப்பினால் எங்களைப் பற்றி மற்றவங்க என்ன நினைக்க மாட்டாங்க?.......’

ஆசிரியருக்கு உள்ளத்திலே சிறு உதைப்பு எடுத்தது, ‘மரியாதை’ என்ற பதத்துக்கு வேறேரு பொருளும் உண்டு என்று உணர்ந்திருந்ததனால். ஆகவே ‘பரவால்வே. நான் போறேன்’ என்று நகரலானார். அவர் மறுபடியும் திடுக்கிட நேர்ந்தது.

குமாரி குதித்து முன் வத்து வழி மறித்து நின்றாள். ‘தயவு செய்யுங்கள் ஸார். தெரியாமல் நடந்த குற்றம். என்னை மன்னிக்க வேண்டும். வீட்டுக்கு வந்து காபி சாப்பிட்டுவிட்டு போங்கள்’ என்து கெஞ்சினாள்.

‘ஒரு வேளை தொழில் செய்யும் குடும்பமாக இருக்குமோ? தூண்டில் போடுகிற முறையிலே இது புது தினுசோ?’ என்று குழம்பியது அவர் மனம். எனினும் அஞ்சலி செய்து நிற்கும் அழகை, இளமையே. இனிய பெண்மையைத் தள்ளி ஒதுக்கி விட்டு முன் செல்லும் துணிவு அந்த வீர ஆசிரியருக்கு வரவில்லை. ஆகவே வீட்டினுள் விஜயம் செய்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமாரி_செல்வா.pdf/14&oldid=1310407" இலிருந்து மீள்விக்கப்பட்டது