பக்கம்:குமாரி செல்வா.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

சிவக்காது. முத்தம் பட்டுத்தான்!” என்று கொக்கரித்தது. அவர் மனம். இதை அவர் வெளியிடவில்லை.

‘செல்வாவுக்கு விளையாட்டுப் புத்தி போகவே யில்லை. பதினெட்டு வயசு ஆகுது. இன்னும் சிறு பிள்ளைத்தனம் போகலே பாருங்களேன்’ என்றாள் அம்மா.

அந்தத் திடீர்ச் சக்திப்பு பற்றி இப்போது எண்ணிய ஆசிரியர் மனம் ஆரவாரமாக ஆமோதித்தது ‘ஆமாம். செல்வாவுக்கு இன்னம் விளையாட்டுப்புத்தி போகவில்லை. வயசாகி என்ன பிரயோசனம்! என்று’.

‘உம் இருந்தாலும் புள்ளெ நல்ல புள்ளெ. குதிப் பும் சூத்தும் குஷியும் குழந்தைத்தனமும் ஜாஸ்தி. அதனாலே என்ன!’ என்று பரிந்து பேசியது ஒரு எண்ணம்.

'வருங் காலத்திலே இவள் நட்சத்திரமாக ஜொலிப் பாள் ஆனால் வால் கட்சத்திரமாகத்தான் விளங்கு வாள்!' என நினைத்த பரமசிவம்செல்வாவின் பேட்டியை மறுபடியும் ரசித்து அனுபவிக்கத் தொடங்கினர். அவர் பத்திரிகையில் அவர் எழுதியது தான்

‘ஸார், இது நான் வந்து உங்களைக் கண்ட பேட்டியு மல்ல. நீங்கள் தேடி வந்து என்னச் சந்தித்த பேட்டியு மல்ல. அதனாலே முட்டிக்கொண்ட பேட்டி என்றே, முட்டிக்கொண்டு பேட்டி கண்ட குட்டி. எனவோ தலைப்பு கொடுங்கள் ஸார்!’ என்றாள் குமாரி செல்வா.

‘வந்தனம். எனது எழுத்து விஷயத்தில் தலையிட்டு ஆலோசனைகள் கூற யாருக்கும் உரிமை கிடையாது.’ என்றேன்.

‘உங்கள் மனைவிக்குக் கூடவா?’ என்று குறும்பாகக் கேட்டாள் குயிலி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமாரி_செல்வா.pdf/17&oldid=1310417" இலிருந்து மீள்விக்கப்பட்டது