பக்கம்:குமாரி செல்வா.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



19


செய்துகொண்டுவிட்டது. எப்படி ஸார்! இந்தப் பிர யோகம் நயமாக யில்லே? பேட்டியே பேட்டிக்கு வகை செய்தது.........ஹஹஹா, ஹிஹிஹி!’

ஒரு டஜன் பேர்வழிகள் ஒரே சமயத்தில் ஜலதரங்கம் வாசித்து, சட்டென நிறுத்திவிட்டது போலிருந்தது அவள் பேச்சை நிறுத்தியதும்!

’இவ்வளவுதானா? இன்னும் ஏதாவது உண்டா?’ என்று கேட்டு வைத்தேன்.

’செத்துக்கொண்டிருக்கிற படஉலகம் உருப்பட வேண்டுமானால் என்னை மாதிரி வருங்கால நட்சத்திரங்கள் ஒரு டஜன் பேர் உடனடிப் படையெடுப்பு நடத்த வேண்டும். எனது பிரண்ட்ஸ் சில பேரு இருக்கிறாங்க-அனுராதா, சியாமளா, ஜோதி, ஜவந்தி, முத்தம்மா, கெளஸல்யா. இன்னும் நாலஞ்சு பேரு சேருவாங்க. ஸார், நீங்ககூட நடிக்கலாம் ஸார். அருமையான ஸோஷல் பிக்சர் ஒன்று தயாரிக்க ஏற்பாடு செய்யுங்கள். அழியாப் புகழ்பெறும் அற்புதத் தயாரிப்பாக இருக்கும் நம்ம நட்சத்திர சித்திரம், இல்லையா ஸார்?’

’பின்னே! நாமெல்லாம் நடிக்கத் துணிந்து விட்டால் அப்புறம் படம் படமாகவா இருக்கும்!’ என்றேன்.

‘பப்படமாத் தானிருக்கும் என்கிறீர்களோ ? என்று கூறிக் கனைத்தாள் அவள்

‘சேச்சே, அப்படிச் சொல்வேணா!’ என்று குறிப் பிட்டேன்.

இதைத் தொடர்ந்து குமாரியைச் சந்திக்க நேர்ந்த விதம். அவளது குணங்கள், தோற்றம் பற்றி யெல்லாம் எழுதியிருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமாரி_செல்வா.pdf/21&oldid=1315632" இலிருந்து மீள்விக்கப்பட்டது