பக்கம்:குமாரி செல்வா.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



20


'குமாரி செல்வா புதுமையிற் புதுமை, தீவிரத்தின் பிம்பம். துணிச்சலின் உயிர்ப்பு. அவளை முதல்முறை காண்கிறவர்கள் என்னடா இவள் இப்படி நடந்து கொள்கிறாளே என்று எண்ணாமலிருக்க முடியாது.’ என்று எழுதிப் பேட்டியை முடித்திருந்தார். பரமசிவம்.

⚫பேட்டியைப் பத்தாவது முறையாகப் படித்து முடித்த ஆசிரியர் பரமசிவம் முதல் முறை மட்டு மென்ன! மூன்றாவது முறையிலும், முப்பதாவது முறை யாகப் பார்க்கும்பொழுதுகூட இப்படித்தான் எண்ண் வேண்டி யிருக்கும். இந்தப் பெண் என்ன இந்தவித மாகவெல்லாம் நடந்துகொள்கிறாள் என்றுதான்!' எனத் தானாகவே புலம்பிக்கொண்டார்.

மேலோட்டமான நவயுகக் கல்வியின் கோளாறு புகுத்திய குணக்கேடுதான். நிறைகுடப்பண்பாடு பெறாமல் அரைக்குடத் தன்மையைத்தான் பள்ளிப்படிப்பு பல பேருக்குக் கற்றுக்கொடுக்கிறது. போலித்துணிச் சல், பெண்மைத் துறவு, ஆண்மை வேஷம், அடக்க மின்மை போன்ற பல குணக்குறைவுகள். இவற்றுடன் இளமைத் துடிப்பும் கூடுகிறபோது கூத்தடிப்பையே காணமுடிகிறது. அல்லது இவ்விதமும் கணிக்கலாம். 'அமெரிக்கத்தனம் என்றுதான். வெகுகாலம் கட் டுண்டு கிடந்த பெண்கள் விடுதலை பெற்று, உரிமை வேட்கையுடன் செயல் புரியத் தொடங்கும்பொழுது உற்சாக மிகுதியிலே பொறுப்பற்ற பிரகிருதிகளாய், கடமை குழ்கிலே கலாசாரம் முதலியவற்றை மறந்த ஜந்துக்களாக மாறிவிடுகிறார்கள். அவர்கள் நாகரிக உயர்வு என்க் கருதுவது உண்மையில் அடங்காப் பிடாரித்தனமாகவே விளங்குகிறது-இப்படி ஒடியது அவர் சிந்தனை.

அமெரிக்கப் படங்கள், அமெரிக்கப் பத்திரிகை கள், அமெரிக்காவின் மலிவுப் புத்தகங்கள் முதலியவற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமாரி_செல்வா.pdf/22&oldid=1315640" இலிருந்து மீள்விக்கப்பட்டது