பக்கம்:குமாரி செல்வா.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23


இப்படி வலர்ந்து வந்த பெருங்கிளையிலே பூத்த தனிமலர் சங்கர புஷ்பம். அவள் வேதங்காரியாகிவிட்டாள் ; விபூதி அணிவதில்லை; குத்துவிளக்கிற்கு பூஜை செய்வதில்லை; புனிதத் திருநாட்கள், விரதங்களைக் கொண்டாடுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் பெருகி வந்தன. பட்டியலில் அடங்காத அளவுக்கு இவை வள்ர்ந்திருக்கும். ஆனால் ’அவன் ஓடிப்போய்விட்டான்' என்ற விஷயம் ஊரார் பேச்சுக்குப் பெருங் கோடு கிழித்துவிட்டது.

ஊரை விட்டு ஓடி வந்தது, அவள் நர்ஸம்மானாக மாறியது, ஒரு செல்வரின் துணைவியாகிக் குமாரி செல்வாவின் தாயானது எல்லாம் நமக்கு வேண்டாத கதை. செல்வாவைச் செல்லமாக வளர்த்து நவயுக நாகளிகச் சுடர்க்கொடியாக மாற்றிவிட அவளது பண் பாடு துணைபுரிந்தது என்பதுதான் முக்கியம். தாயின் உரிமையில் தலையிடவோ, மகளின் வளர்ச்சியில் தடை விதிக்கவோ தந்தை பரந்தாமர் விரும்பியதில்லை. ஆசையிருந்தாலும் அவர் வார்த்தைகள் உரிய மதிப்பைப் பெறா என்பது அவருக்கே தெரியும். அதனால் அவர் தன் கெளரவத்தைத் தானே காப்பாற்றிக் கொண்டார்.

குமாரி செல்வா படித்தாள். காலேஜில் காலடி வைத்துப் பார்த்துவிட்டு அது பிடிக்கவில்லை என விட்டுவிட்டாள். படிட்பிலே என்றைக்குமே அவளுக்கு ‘இன்ட்டரஸ்ட்’ கிடையாது. தோழிகளுடன் குதித்துக் கூத்தாடுவது, கூப்பாடு போடுவது, எட்டு வீட்டுக்குக் கேட்கும்படியாக ஒஹொஹோ ஆஹஹா என்று கத்திச் சிரிப்பது போன்ற காரியங்களைக் குறைவறச் செய்து வந்தாள்.

’பொண்ணாகப் பொறந்தவ இப்படியெல்லாம் நடக்கப்படாது அம்மா. கொஞ்சம் அடக்கம் ஒடுக்க மாக இருக்கணும்’ என்று போதித்து அவளுக்கு வழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமாரி_செல்வா.pdf/25&oldid=1315661" இலிருந்து மீள்விக்கப்பட்டது