பக்கம்:குமாரி செல்வா.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25


கென்று கொட்டுவதற்கு வலுவிருந்தது அவள் கையில்! 'யே செங்குரங்கே' என்று யாராவது சொன்னால் ’வவ் வவ்வே' என்று உதடுகளை மடித்து வாயினால் வலிப்புக் காட்டும் திறமையுமிருந்தது.

வயதாக ஆக இக்குணங்கள் குறையாமல் வளர்ந்து வந்தன. ஆகவே தீராத விளையாட்டுப் பிள்ளை'யாகத் தானிருந்தாள் குமாரி செல்வா. அவள் பண்பினால் யாருக்கும் தீங்கு விளையவில்லை.

’ஆணால் அவளுக்கே அவை தீங்கு விளைவிக்கும். இதுவரை விளையவில்லை யென்றால் இனியும் விளையாது என்று நிச்சயித்துவிடலாமா!', என்று நினைத்தார் பரமசிவம். ஆசிரியரது ஊகங்கள் அநேகமாகத் தவறுவது கிடையாது. மெஜாநீட்டி இனத்திலேயே கலந்தது இந்த யூகமும் !

3

ஆசிரியர் பரமசிவத்திற்கு ஆசை இருந்தது, கோலக் குமாரி செல்வாவைக் காரியதரிசி ஆக்கிக்கொள்ளலா மென்று. அவரது ஆசைக்குத்தான் அளவிருந்ததா என்ன ! "வால் நட்சத்திரம் பத்திரிகையை பிரமாத அற்புதமாக நடத்தவேண்டும்; காரியாலயம் தனி உலகமாக மிளிர வேண்டும்; அழகு மிகுந்த குட்டிகளையே ஆபீஸ் பையி’களாகவும், குமாஸ்தா, டைப்பிஸ்ட் உதவி ஆசிரியர்களாகவும் நியமிக்கவேண்டும் என்றெல்லாம் அவசவினார்.

ஆனால் அவரது பத்திரிகை_ஐந்தாவது இதழுடனேயே அஸ்தமித்துவிட்டது. இந்தத் தமிழ்நாட்டை நம்பிப் பத்திரிகை போடுவதைவிட, ’கோவித்தா கோவிந்து’ என்று கூச்சல் போட்டுக்கொண்டு தீர்த்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமாரி_செல்வா.pdf/27&oldid=1315673" இலிருந்து மீள்விக்கப்பட்டது