பக்கம்:குமாரி செல்வா.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



28


காரில் ஏறிக்கொள்ளுங்களேன்!' என்று உபசரித்தான் ராஜா.

வெட்டும் பார்வை. கொல்லும் ஒரு புன்சிரிப்பு, குளிர்ந்த குரலில் ’எதுக்கு வீண் சிரமம்? என்ற பதில். இவற்றை ஏககாலத்தில் அளித்த குமாரி சிறிது முன் அசைந்தாள். எல்லாம். அவனை அடிமைகொள்ளும் சக்திகளாய் இலங்கின.

’சிரமம் ஒன்றுமில்லை, மிஸ் செல்வா. சும்மா காரில் ஏறிக்கொள்ளுங்கள்’ என்று குழைந்தான் அவன். அவளும் அதிகமாக பிகு செய்யவில்லை.

அவள் காரினுள் அடைக்கலமானதலனால் காரே அற்புத அழகு பெற்றுவிட்டதாகத் தோன்றியது அவனுக்கு. ’நாம் இதுபோல் சொந்தக் காரில் என்று தான் போகமுடியுமோ? ஒரு அழகான கார் அவசியம் தேவைதான்’ என்று நினைத்தாள் அவள்.

’இன்று உங்களுடைய நடனம் ரொம்பப்பிரமாதம். உங்கள் கலை நிகழ்ச்சியை விசேஷமாக இன்றையப் புரோகிராமில் சேர்த்தது நல்லதாயிற்று !’ என்றான் ராஜா.

’வந்தனம்’ என முனங்கினாள் குமாரி.

’நீங்கள் ஏன் படிப்பை நிறுத்திவிட்டீர்கள்? நீங்கள் வராமல் போன நாளிலிருந்து கல்லூரியில் அற்புதக் காந்த அழகு மிகவும் குறைந்து போய்விட்டது என்றே தோன்றுகிறது. மகத்தான நஷ்டம்தான்’ என்று குரலிலே இனிமையைத் தேக்கி அறிவித்தான் அவன்.

’அதனாலென்ன. காந்த வனப்பும் கலை ஒளியும் குறுகிய எல்லையினுள் ஒடுங்கிக் கிடக்கலாமா ? அது தான் மகத்தான நஷ்டம் கல்லூரிக்கு ஏற்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமாரி_செல்வா.pdf/30&oldid=1315685" இலிருந்து மீள்விக்கப்பட்டது