பக்கம்:குமாரி செல்வா.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33


மகள் விஷயத்தைச் சொல்லவும் அவள் உள்ளத் திலும் ஆனந்தம் நிறைந்தது. செய்யக்கூடியவன் தான். செல்வம் நிறைய இருக்கு. செய்யலாம். அவன் பேச்சு தவறாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது செல்வாவின் பொறுப்பு’ என்று நினைத்தாள் சங்கர புஷ்பம்.

⚫செல்வா தன் பொறுப்பை நன்கு உணர்ந்திருக் தாள். அது மட்டுமல்ல. முன்னேறுவதற்குக் கையாள வேண்டிய கலை நயங்களையும் நன்றாகத் தெரிந்து வைத்திருந்தாள். அவள் திறமைகளில் அந்தப் பண்பும் இயல்பாகக் கலந்திருந்தது.

ஆகவே குமாரி செல்வா ’பணக்காரன் மகன் பணக்காரன்’ என்ற அந்தஸ்திலே வாழ்ந்து அதை வெளிச்சம்போட்டுத் திரிய விரும்பிய செல்லப்பிள்ளை ராஜாவின் காரில் அடிக்கடி காணப்பட்டாள். சினிமாத் தியேட்டர்களில், ஹோட்டல்களில், கடலோரத் திலே, தன் வீட்டு மாடியிலே எல்லாம் ராஜாவின் இனை பிரியாத ஜோடிபோல் திகழ்ந்தாள் அவள்.

ராஜா உண்மையிலேயே கிடைத்தற்கரிய ராணி யைப் பெற்றுவிட்ட ராஜா என்றே நம்பினன். செல்வா கண்ந்தோறும் வியப்புகள் காட்டும் கலை எழில். காணக் காண நயம் குறையா அமுத நிறைவு. பழகப் பழகப் புதுமை குன்றாத இளமை இன்பம். அன்புடன் பேசி உறவாடி மகிழ மகிழ ஆசையை அடங்கவிடாமல் தூண்டும் அழகுக் காந்தம். அவள் கண் சுழற்சியில், இதழின் சுழிவில், இன்பச் சிரிப்பில், மேனி நயத்தில், இளமை விருந்தில், கலை விளையாட்டில் அவன் தன்னையே பறிகொடுத்து விட்டான்.

’நீ ஆட வேண்டியதில்லை. ராஜாவின் ராணி யாகவே என்றும் இருந்துவிடு, செல்வா. நீ விரும்பிய சொந்தக் கார் உனக்குக் கிடைத்துவிட்டது. சுகவாழ்வுக்குத் தேவையான வசதிகள் எல்லாம் உனக்கு 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமாரி_செல்வா.pdf/35&oldid=1315702" இலிருந்து மீள்விக்கப்பட்டது