பக்கம்:குமாரி செல்வா.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



34


உள்ளன. நீ ஏன் ஆடிப் பிழைக்க விரும்புகிறாய் ?’ என்று கேட்டான் ஒருநாள்.

அவன் சிரித்தாள். அலட்சியம் தொனித்தது அதில். அகங்காரம் மிதந்தது அதிலே. எள்ளிடும் தன்மை நிறைந்திருந்தது. என்னவோ சூடாகச்சொல்ல வாயெடுத்தாள். பின் தன்னையே அடக்கிக்கொண்டாள் தன் நலனை எண்ணி துவண்ட கொடி யென நெளிந்து அவன் மீது சாய்ந்து அவன் அருகிலே அமர்ந்து கழுத்தில் கைனனைத்து இனியகுரலில் ரகசியம் பேசினாள்.

ராஜா, நமது திட்டம் என்ன? நாம் இவ்வளவு செலவு செய்தது எல்லாம் வீணாக்த்தான படப்பிடிப்பு வேண்டுமாணால் காத்துக்கிடக்கட்டும். நாட்டியகோஷ்டி யைத் தீவிரமாக நடத்தி எங்கும் சுற்றிக் கலைநயம் காட்டவேண்டியது முக்கியம்’ என்றாள். தன் பேச்சுக்கு அதிக வலு கொடுப்பதற்காக அன்பனின் கன்னங்களில் இரண்டும் இதழ்களில் ஒன்றும் சுடச்சுடப் பொறிந்தாள். தனது இதழ்களின் இன்ப முத்திரை யைத் தான் !

அப்புறம் அவனுக்குத் திறமை ஏது, துணிவு ஏது அவள் திட்டத்திற்கு எதிராகப் பேசுவதற்கு!

குமார் செல்வா சுக வாழ்வை மட்டுமே விரும்ப வில்லை. பணம், பவீஷ, படாடோபம், செல்வச்செள கரியங்கள் மட்டும் போதா வாழ்க்கை சிறப்புறுவதற்கு. வாழ்க்கைக்கு இவையும் தேவைதான்; எனினும் இவற்றையெல்லாம் விட அதிகமாகத் தேவை புகழ். அது அவசியத்தேவை-இதுவே அவள் இதய ஒலி.

புகழ் வேண்டும். அதிகமாகப் புகழ்பெறவேணும். மேலும் புகழ்....மேலும் மேலும் புகழ்...மேலே மேலே மேலே-புகழ் வளர்ந்துகொண்டே போகவேண்டும். எல்லையில்லாமலே. அவளது ஆசை அது. அவளுக்கு அடங்காத-அடக்க முடியாத-பசி அது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமாரி_செல்வா.pdf/36&oldid=1315706" இலிருந்து மீள்விக்கப்பட்டது