பக்கம்:குமாரி செல்வா.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



35


பசி-எந்த ரகத்ததாக யிருந்தாலும் சரி-மிகுந்து விடுகிறபோது, அதைத் தணிக்கவேண்டும் என்ற ஆசை வளர்கிறபோது, பசியே தனியாத ஆசையாகிப் பின் வெறிநிலை அடைகிறபோது, அந்த வியாதிக்கு ஆளா கிறவர்கள் தங்கள் திருப்திக்காக எந்த வழியையும் கையாளத் துணிந்து விடுகிறார்கள். சந்தர்ப்பம் தங்கள் முன்னால் கொண்டு வந்து சேர்க்கிறவர்களைத் தங்கள் நலனுக்காகப் பயன் படுத்திக்கொள்ளத் தவறுவதில்லை. அவர்கள் உதவி தேவையில்லாமல் போகிறபோது-அல்லது, அவர்களைவிட அதிகம் துணைபுரியக்கூடிய வர்கள் வந்து சேர்கிற பொழுது-முந்தியவர்களை உதறி எறியவும் தயங்குவதில்லை ’செய் நன்றி’ என்ப தெல்லாம் வாழ்க்கை உயர்வுக்குக் கட்டி வராத பேச்சேயாகும் இவர்களுக்கு!

⚫புகழ்ப்பசி மிகுந்த குமாரி செல்வா தனது வாழ்க்கை உயர்வுக்குக் குங்தகமாக யிருப்பவர்களின் ஆலோசனைகளைக் ’கட்டி வராதபேச்சு’ என்று ஒதுக்கி விட்டாள். ராஜா அவளுக்கு நல்லது என்று எவ்வள வோ சொன்னான். அவன் அநாவசியமாகத் தன் விஷயங்களில் தலையிடுகிறான் என்று சினுங்கினாள் அவள்.

அவன் சிரித்தும், சினந்தும் உபதேசிக்கத் துணிந்த போது சீறி விழுந்தாள் குமாரி. அவளைத் தனது ஸ்ரீமதியாக மாறிவிடும்படி கோரினான் அவன். ’எனக் குக் கல்யாணம் தேவையில்லை. கட்டுப்பாடுகலை விதிக்கும் சம்பிரதாய முறை எதுவுமே எனக்கு வேண்டாம். நான் கலைவளர்க்க வாழ்கிறவள். எனது இஷ்டம்போல் வாழும் உரிமை எனக்கு உண்டு’ என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டாள்.

வரவர அவன்மீது அவளுக்கு வெறுப்பு பிறந்து, கசப்பாக மாறி, விரோதமாக முற்றியது. ராஜா வீண் தொல்லை, அமைதியைக் கெடுக்கும் தொண தொணப் பன், கலை நயம் தெரியாது தன்னைக் கழுத்தறுக்க வந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமாரி_செல்வா.pdf/37&oldid=1315709" இலிருந்து மீள்விக்கப்பட்டது