பக்கம்:குமாரி செல்வா.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40


பார்த்துக்கொண்ட பரமசிவத்தின் கண்கள் எதிர் நின்ற பாவைமீது ஓடின. அவர் சிரித்தார்.

'ஏன் சிரிக்கிறீர்கள் ?’ என்று கேட்டாள் செல்வா.

’இன்று அளவு டேப் இல்லாமல் போனால்கூட, நூலுக்கும் புட்ருலுக்கும் வேலை இருக்காது. நிச்சய மாக இல்லை என்று கூறினார் அவர்.

அவள் புரிந்துகொள்ள முடியாமல் விழித்தாள்.

இடை 31½ அங்குலம் என்று பேட்டியில் எழுதி யிருந்ததை அன்று ஆட்சேபித்து அளந்து பார்க்கச் சொன்னிர்களே. இன்று அதை நீங்கள் மறுக்க முடி யாது. ஆகவே எனது எழுத்திலே தீர்க்க தரிசனமான உண்மை ஏழு வருஷங்களுக்கு முன்பு தனாகவே வந்து விழுக்திருக்கிறது!’

அவருடைய ஹாஸ்யத்தை ரசிக்க முடியாமல்நிற்க இயலவில்லை அவரால். அதனால் சிரித்தார். பலமாகச் சிரித்தார். அப்பாவி மனுஷன் அந்தச் சிரிப்பாலேயே ஜீவனிழந்து செத்துப் போவாரோ என்று மற்றவர்கள் அனுதாபப் படும்படியாகச் சிரித்தார். குமாரியின் பேட்டிகள் அவரது நினைவில் அவ்வளவு பசுமையாய் பதிந்திருந்தன.

அவள் வெட்கமுற்று முகம் சிவந்து நின்றாள். பாதி தின்ற மாம்பழம் அவள் கையிலே இருக்கிற உணர்ச்சி உண்டாகவும் அவசரம் அவசரமாக அதைத் தின்னும் திருப்பணியில் ஈடுபட்டாள். அது அவரது சிரிப்பை அதிகப்படுத்தியது.

’இது ஐஸ் க்ரீம் இல்லை, செல்வா. கரைந்து விடாது. மெதுவாய் நிதானமாக சுவைத்துச் சாப்பிட லாமே!’ என்று சிரிப்போடு சிரிப்பாகச் சொற்களையும் அருளினார் ஆசிரியர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமாரி_செல்வா.pdf/42&oldid=1315719" இலிருந்து மீள்விக்கப்பட்டது