பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

'குமுகவாசகம்’ என்னும் பெயருடன் வெளி வங் அள்ள இந்நூல், சென்னை அரசியலார் புதிதாக வெளியிட் டுள்ள 1951 பாடதிட்டத்தின்படி எழுதப்பட்டுள்ளது. இது எல்லா மாணவர்களும் படித்தற்குரிய சிறப்புப் பகுதியை மட்டும் தன்னகத்தே கொண்டு திகழ்கிறது.

இலக்கணப் பாடத்தைத் தனித்துப் பயில்கையினும், உரைநடைப் பாடத்தோடு தொடர்ந்து பயிலின், அப் பாடத்தில் ஒர் உணர்ச்சியும் ஊக்கமும், தோன்றும் எனக் கருதி, ஒவ்வோர் உரைநடைப் பகுதியின் கீழும் இலக் கணப் பாடம் எழுதப்பட்டு இருப்பது, மாணவர்கள் தம் தமிழ் அறிவைச் செம்மையுடன் பெறப் பெருந்துணை யா கும் என்பதில் ஐயமில்லை.

அறிவு வளர்ச்சிக்குரிய பல திறப்பாடங்களும், ஒல் வொரு பாடத்தின் முடிவிலும் வினுக்களும், பயிற்சி யும், வேண்டிய அளவுக்குக் குறிப்புரையும் இந்நூல் தன் கண் கொண்டிருத்தலால், 'பொன்மலர் நாற்றம் உற்ருற்போல் மாணவர்கள் ஆபாசம் இன்றிப் பாடங் களே நன்கு உணர்ந்து, தம் மனத்தில் பதியவைத்துக் கொள்வர் என்பதை அறுதியிட்டு உறுதியாகக் கூறலாம்.

இந்நூலில் காணும் பாடல்கள் சிலவற்றை இதில் இணைத்துக் கொள்ளத் தம் இசைவைத் தெரிவித்த உரிமை யாளர்கட்கு என் நன்றியுள்ள வணக்கம் உரித்தாகுக.

இந்நூலைத் தமிழ் உலகம் ஏற் று, என்னே ஆதரித்து ஊக்கம் அளிக்க வேண்டுகிறேன்.

அம்மையப்பர் அகம்’ 77. அவதானம் பாப்பையர் தெரு,

சூளை, சென்னை. இங்ஙனம்

à–11—’á1 - { ifj. ĝi. #.