பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

3

மத உண்மைகளை அங்குள்ளவர்களுக்குப் போதிக்க முடி யாது என்பதை உணர்ந்தார். அதன் பொருட்டுத் தகுந்த தமிழ் அறிஞரை நாடினர்; அவர்களிடம் முறை யாகத் தமிழ் மொழியில் உள்ள இலக்கண இலக்கியங் களேக் கற்றுத் தேர்ந்தார் , தம் பெயரையும்

o

வீரமாமுனிவர் எனக் குறித்துக் கொண்டார் ; காவி யுடை தரித்தார்; புலால் உணவை ஒழித்தார்; பல் லக்கில் ஏறிப்போகும் பழிக்கத்தைக் கைக்கொண்டார். பார்ப்பவருக்குச் சிறந்த சங்கியாசிபோலக்காணப்பட்டார். கோலத்திற்கு ஏற்ற குணமும் இவரிடம் பொருந்தி யிருந்தது. இவருடைய முகம் புன்னகை கொண்டு விளங்கும். விழிகள் அருளுடன் கூடிக் காணப்படும். இக் தத் தோற்றப் பொலிவோடு திருநெல்வேலி ஜில்லாவைச் சார்ந்த வடக்கன்குளம், காமநாயக்கன்பட்டி, கயற்ருறு போன்ற இடங்கட்குச் சென்று சமயச் சொற்பொழிவு களைச் செய்து வந்தார்.