பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

5

இது இலக்கணம் பயில்வோர் எளிதில் உணர்தற்கு எற்ற துணைக் கருவியாகும். இந்நூல்களே அன்றி, வேதியர் ஒழுக்கம், சதுர் அகராதி முதலியவற்றை யும் இவர் எழுதியுள்ளார்.

8. மாணவர்களே! அயல்நாட்டில் பிறந்து, அம் மொழியில் பழகிய இவர் தமிழ்மொழி பயின்று தமிழ்த் தாய்க்குப் பெருந்தொண்டு செய்ததை காம் பாராட்டா மல் இருக்க முடியுமா? இத்தகைய தமிழ்த் தொண்டர் பாண்டியகாட்டில் மணப்பாறை என்னும் ஊரில் 1740-ல் இம் மண்ணுலகு விடுத்து, விண்ணுலகு அடைந்தார்.

அருஞ் சொற்கள்

ஆர்வம் ஆசை. பற்று . ஆசை. பிரசாரம் - விளம்பரம். சொல் மாரி - சொல் மழை. ஆற்றல் - வன்மை. பிரசங்கம். சொற்பொழிவு. புலால் - மாமிசம். கோலம் அலங்காரம். பொலிவு - அழகு. காவியம் கதையைக் கூறும் செய்யுள் நூல். கழிபேர் உவகை மிகுந்த மகிழ்ச்சி. அகராதி - சொற்களுக்கு அகரவரிசையில் பொருள் அறிவிக்கும் ஒரு தொகுப்பு நூல். விண்ணுலகடைந்தார் - இறந்தார்.

கேள்விகள்

1. ரெவரெண்டு பெஸ்கிப் பெரியார் எங்கு எப்போது

பிறந்தார் ?

2, இவருக்கு தைரிய நாதர்' எனப் பெயர் வரக் காரணம்

என்ன ?

3. இவர் எப்பொழுது ஏன் இந்தியாவிற்கு வந்தனர் ? 4. இவர் ஏன் தமிழ் மொழியைப் பயின்ருர் ?