பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

7

க்+அ = க. 'க்' மெய் எழுத்து, அ உயிர் எழுத்து. இவ் விரண்டும் சேர்ந்த எழுத்தே க' என்பது. ஆகவே, உயிரும் மெய்யும் சேர்ந்து உண்டாகும் எழுத்து, உயிர் மெய்யெழுத்துக்

களாம்,

அவை இருநூற்றுப்பதினுறு.

ஃ இந்த வடிவமான எழுத்து ஆய்த எழுத்து. இது ஒரே எழுத்தாகும்.

பயிற்சி

' அவர்களே உலகமக்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இடம் பெறுபவர் என்பதே அவ்வுண்மையாகும்." இவ்வாக்கியத்தில் வந்துள்ள ஒவ்வோர் எழுத்தையும் தனித்தனி எடுத்து எழுதி இன்னின்ன பெயருடைய எழுத்தெனவும் குறிப்பிடு,

ஆய்த எழுத்து அமைந்த சொற்கள் மூன்றைக் குறிப் பிடு.

பள்ளிக்கூடத்திற்குக் காலந் தவருமல் போய் வந்தார்இதில் வந்துள்ள உயிர்மெய் எழுத்துக்களை உயிர் வேறு, மெய் வேருகப் பிரித்துக்காட்டு,